சிறு வயதிலேயே மூட்டு தேய்மானம்,மூட்டு வலி,இடுப்பு வலி,முதுகு வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது.இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து மீள,உடல் எலும்புகளின் வலிமை அதிகரிக்க உளுந்தில் கஞ்சி செய்து குடிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
1)கருப்பு உளுந்து – இரண்டு தேக்கரண்டி
2)கருப்பு மிளகு – நான்கு
3)சீரகம் – 1/4 தேக்கரண்டி
4)மஞ்சள் பொடி – சிட்டிகை அளவு
5)உப்பு – சிறிதளவு
செய்முறை:
ஒரு கிண்ணத்தில் உடைத்த கருப்பு உளுந்து இரண்டு தேக்கரண்டி போட்டு தண்ணீர் ஊற்றி 1/2 மணி நேரம் ஊறவிடவும்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்து ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும்.
அடுத்து அடுப்பில் ஒரு வாணலி வைத்து நான்கு கரு மிளகு மற்றும் 1/4 தேக்கரண்டி சீரகம் சேர்த்து லேசாக வறுத்து ஆறவிட்டு பொடியாக அரைத்துக் கொள்ளவும்.இதை உளுந்து பேஸ்ட்டில் போட்டு கலந்து கொள்ளவும்.
பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 100 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு உளுந்து பேஸ்டை போட்டு கைவிடமால் கலந்து விடவும்.உளுந்தின் பச்சை வாடை நீங்கியதும் சிட்டிகை அளவு மஞ்சள் பொடி மற்றும் உப்பு சேர்த்து கலந்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும்.இந்த கஞ்சியை ஆறவிட்டு குடித்து வந்தால் உடல் எலும்புகள் அனைத்தும் வலுப்பெறும்.
தேவையான பொருட்கள்:
1)கருப்பு உளுந்து – 20 கிராம்
2)தேங்காய் துருவல் – இரண்டு தேக்கரண்டி
3)கருப்பட்டி – தேவையான அளவு
4)ஏலக்காய் – சிறிதளவு
செய்முறை:
ஒரு கிண்ணத்தில் 20 கிராம் கருப்பு உளுந்து போட்டு தண்ணீர் ஊற்றி ஊற விடவும்.ஒரு மணி நேரத்திற்கு ஊறவைத்து மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 100 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அடுத்து உளுந்து பேஸ்ட்டில் ஏலக்காய் பொடி மற்றும் கருப்பட்டி சேர்த்து கரைக்கவும்.இதை சூடாகி கொண்டிருக்கும் நீரில் ஊற்றி கரண்டியால் கலந்துவிடவும்.
உளுந்தின் பச்சை வாடை நீங்கியதும் இரண்டு தேக்கரண்டி அளவு தேங்காய் துருவல் போட்டு கலந்து இறக்கவும்.இந்த கஞ்சியை தினமும் குடித்து வந்தால் இடுப்பு வலி,மூட்டு வலி,முதுகு வலி உள்ளிட்டவைகள் சரியாகும்.தினமும் ஒரு கிளாஸ் உளுந்து கஞ்சி குடித்து வந்தால் உடலிலுள்ள எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.