Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொரோனாவால் காவு வாங்கப்பட்ட மற்றொரு சினிமா பிரபலம்!! அதிர்ச்சியில் திரையுலகமே!

உலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தோற்றால் சாதாரண மக்கள் தொடங்கி சினிமா பிரபலங்கள் அரசியல்வாதிகள் என்று பலரை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது.

அந்த வரிசையில் அடுத்தபடியாக  பிரபல சினிமா தயாரிப்பாளரான சுவாமிநாதன் இன்று உயிரிழந்தார். இவர் லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர். பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில், அவரது மகன் அஸ்வின் ராஜா காமெடி நடிகராக அறிமுகமாகி தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இவர் 90களில் முன்னணி  நடிகர்களான பிரபு,கார்த்தி, விஜயகாந்த்,  விஜய்,அஜித், சூர்யா,ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து படம் தயாரித்து தனது சொந்த நிறுவனத்திலேயே ரிலீஸ் செய்தார்.

இவரது நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட, கோகுலத்தில் சீதை, ப்ரியமுடன், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பகவதி, அன்பே சிவம், புதுப்பேட்டை, சிலம்பாட்டம் உட்படபடங்கள் செம ஹிட் கொடுத்தது.

இப்படிப்பட்ட தயாரிப்பாளரான சுவாமிநாதன் அண்மையில்  கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு, சென்னை உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பலனின்றி இன்று உயிரிழந்தார்.

இவரது மரணத்தை கேட்ட திரையுலகமே அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது. பல பிரபலங்கள் இவருக்கு இரங்கல் செய்தியை பதிவிட்டு வருகின்றனர், 

Exit mobile version