சாலையில் படுத்து போராட்டம் செய்த குடிமகள்! மதுபாட்டில்  விலையை குறைக்க வேண்டும்!

0
141
Citizens who protested by lying on the road! The price of alcohol should be reduced!

சாலையில் படுத்து போராட்டம் செய்த குடிமகள்! மதுபாட்டில்  விலையை குறைக்க வேண்டும்!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் மூப்பனார் சிலை அருகே அந்தியூர் அத்தாணி செல்லும் பிரதான சாலையில் நேற்று இரவு ஏழு மணியளவில் சுமார் 50வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சாலையின் நடுவே படுத்து கூச்சலிட்டு கொண்டிருந்தார்.அப்போது அந்த பகுதியில் உள்ளவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஏதேனும் வாகனம் இடித்துவிட்டு நிற்காமல் சென்று விட்டார்களா என்ற சந்தேகத்தில் அருகில் சென்று பார்த்தனர்.

அப்போது அந்த பெண் மது அருந்திவிட்டு போதையில் சாலையில் படுத்து ரகளை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.இதனையடுத்து சாலை படுத்திருப்பதால் வாகனங்கள் இடித்து விடுமோ என்ற அச்சத்தில் சிலர் அந்த பெண்ணை பிடித்து ரோட்டின் ஓரத்தில் படுக்க வைத்தனர்.ஆனால் அந்த பெண் மீண்டும் சாலையில் நடுவே வந்து படுத்துக்கொண்டு ரகளை செய்தார்.

அந்த பெண் அரசு நிர்ணயம் செய்த விலையை விட பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகம் வாங்குவதாக அதனை வாங்கி குடிப்பதற்கு பணம் இல்லாமல் மற்றவர்களிடம் கேட்டு மிகவும் சிரமப்பட்டு மதுபாட்டிலை வாங்கி குடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும் கூறி கூச்சலிட்டு கொண்டிருந்தார்அதனையடுத்து அந்த பெண்ணின் ரகளை குறித்து அந்தியூர் போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சப் இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் அந்த பெண்ணை சாலையை விட்டு ஓரமாக அழைத்து வந்து உணவு வாங்கி கொடுத்து பிறகு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.இதனால் அந்த பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு நிலவியது.