தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவித்த அதிலிருந்தே தமிழக அரசியலில் பரபரப்பாக காணப்படுகிறது. அந்த விதத்தில் அதிமுகவில் அறிவிக்கப்பட்டிருக்கும் வேட்பாளர்களை மாற்றக்கோரி பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. அதனை வைத்து திமுக தன்னுடைய அரசியல் லாபத்திற்காக தன்னுடைய பிரச்சாரத்தில் பயன்படுத்திக் கொள்கிறது என்று சொல்லப்படுகிறது.
தமிழகம் முழுவதிலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆளும் கட்சியின் மீது எவ்வாறு குற்றம் சுமத்தலாம் என்பதிலேயே குறியாக இருக்கிறார் என்றும், அவர் மக்களின் வளர்ச்சிக்காக ஆட்சிக்கு வரவில்லை அதிமுகவை தோற்கடித்து ஆட்சியில் அமர்ந்து சம்பாதிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக தான் ஆட்சிக்கு வரத் துடிக்கிறார் என்பது போன்ற கருத்து தொடங்கியிருக்கிறது.
அதிமுகவைப் பொறுத்தவரையில் பதவிக்கு வந்த புதிதில் எடப்பாடி பழனிச்சாமி மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு பெறவில்லை என்றாலும் நாட்கள் செல்லச் செல்ல அவர் கொண்டு வந்த திட்டங்கள் செயல்பாட்டின் வேகம் போன்றவைகள் எல்லாம் சேர்ந்து தமிழக மக்களிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அமோக வரவேற்பை பெற்றார்.அதோடு சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட வன்னியர்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு சட்ட மசோதா நிறைவேற்றியதில் அவருக்கு மிகப்பெரிய ஆதரவு மக்களிடையே கிடைத்திருக்கிறது.
இவற்றைப் பொறுத்துக் கொள்ள இயலாத எதிர்கட்சியான திமுக அதிமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறது. மேலும் அதிமுகவை ஊழல் கட்சி என்று சொல்கிறீர்களே தாங்கள் ஆட்சியில் இருந்த சமயத்தில் நீங்கள் செய்த ஊழலை நாடே பார்த்து வியந்தது. அதையெல்லாம் எங்கே போய் சொல்வது என்பது போன்ற கேள்விகளும் சமூகவலைதளத்தில் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டசபை தொகுதியில் திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் இரண்டு தரப்பினருக்கு இடையே அடிதடி ஏற்பட்டது. இதன் காரணமாக, அங்கே நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டன. ஆகவே அந்த கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு ஓடத் தொடங்கினார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு உண்டானது.திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டசபை தொகுதியில் திமுக வேட்பாளராக இந்த முறை போட்டியிட இருப்பவர் ஆண்டி அம்பலம் இவர் சென்ற சட்டசபைத் தேர்தலில் அதிமுகவை சார்ந்த ஷாஜகான் என்பவரை எதிர்த்து நின்று வெற்றி பெற்றார்.
சென்ற முறை வெற்றிபெற்ற நம்பிக்கையில் இந்தத் தேர்தலிலும் ஆண்டி அம்பலத்திற்கு திமுக சார்பாக நத்தம் தொகுதி ஒதுக்கப்பட்டது.நத்தம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளராக பதவி வகித்து வருபவர் ரத்தினகுமார் இவர் 20 வருடத்திற்கு மேலாக திமுகவில் இருந்து வருகின்றார். இவரும் நத்தம் சட்டசபைத் தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை கொடுத்திருந்தார். ஆனால் திமுக தலைமை இவருடைய மனுவை ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக கோபத்தில் இருந்த ரத்தினகுமார் அவர்களின் ஆதரவாளர்கள் நத்தத்தில் இருக்கின்ற தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் மோதலில் ஈடுபடத் தொடங்கினார்கள். இந்த கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் சக்கரபாணி தலைமை தாங்கி மேடைக்கு வர தொடங்கியவுடன் ரத்தினகுமார் ஆதரவாளர்கள் அந்த மேடையில் தகராறு செய்ய தொடங்கினார்கள்.
இந்த நிலையில், ஆண்டி அம்பலத்தின் ஆதரவாளர்களுக்கும் ரத்தினகுமார் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் தகராறு பெரிதாகி கைகலப்பு ஏற்பட்டது. கூட்டத்திலிருந்த நாற்காலிகள் அனைத்தும் பறக்கவிடப்பட்டன. இதன் காரணமாக, மண்டபத்தில் இருந்த திமுகவின் தொண்டர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். திமுகவின் வேட்பாளர் அறிமுக கூட்டத்திலேயே இவ்வாறு மோதல் ஏற்பட்ட காரணத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு உண்டானது.
அதோடு வேட்பாளர் அறிமுகம் கூட்டத்திலேயே இப்படி தகராறு வருகிறது. எதிர்காலத்தில் இவர்கள் இங்கே வெற்றி பெற்று விட்டால் இந்த தொகுதியின் நிலை என்ன என்று சாமானிய மக்கள் யோசிக்கத் தொடங்கி இருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
சும்மா கிழி திமுக வேட்பாளர் கூட்டத்தில் பறந்த நாற்காலிகள்! அலறி அடித்துக் கொண்டு ஓடிய திமுக உறுப்பினர்கள்!
