கோவையில் காவல்துறையினருடன் மோதல்.. குண்டுக்கட்டாக தூக்கி வீசப்பட்ட திமுக பகுதி செயலாளர்!!

0
258
Clash with the police in Coimbatore.. DMK regional secretary was thrown with a bomb!!

கோவையில் காவல்துறையினருடன் மோதல்.. குண்டுக்கட்டாக தூக்கி வீசப்பட்ட திமுக பகுதி செயலாளர்!!

கோவை மாவட்டம் பிஎன்புதூரில் உள்ள வாக்குச்சாவடியில் காவல்துறையினருக்கும் திமுகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அங்கு பதட்டமான சூழல் காணப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி இன்று காலை முதல் அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கோவை பிஎன்புதூரில் உள்ள வாக்குச்சாவடி அருகே 200 மீட்ட தொலைவில் திமுக உள்ளிட்ட கட்சியினர் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் விநியோகம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் கட்சி சின்னங்களை வைத்திருந்தனர். வாக்குப்பதிவு நடைபெறும் சமயத்தில் கட்சி சின்னங்களை வைத்திருப்பது தேர்தல் விதிமுறை மீறல் என்பதால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவர்களை எச்சரித்துள்ளனர். உடனே அவர்களும் தங்களின் சின்னத்தை மறைத்து வைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பூத் சிலிப் வழங்கும் இடத்தில் அதிகளவில் கூட்டம் இருந்ததால் காவல்துறையினர் அவர்களை கலைந்துபோக கூறியுள்ளனர். அப்போது திமுக பகுதி செயலாளர் பாக்யராஜ் என்பவருக்கும், உதவி கமிஷ்னர் நவீன் குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் உதவி கமிஷ்னர் நவீன் குமார் திமுக செயலாளர் பாக்யராஜை தாக்கியதாக கூறப்படுகிறது.

மேலும், ஒரு கட்டத்திற்கு மேல் திமுக பகுதி செயலாளர் பாக்யராஜை குண்டு கட்டாக தூக்கி சென்ற காவல்துறையினர் அவரை சாலையில் போட்டதாக தெரிகிறது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. பாக்யராஜ் உதவி கமிஷ்னர் நவீன் குமாரின் சட்டையை பிடித்ததால் தான் பிரச்சனை ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.