Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொரோனா பாதிப்பையடுத்து பரவும் பன்றி காய்ச்சல்! விஞ்ஞானிகள் அளித்த விளக்கம்

Swine Flu Affect in Assam

Swine Flu Affect in Assam

கொரோனா பாதிப்பையடுத்து பரவும் பன்றி காய்ச்சல்! விஞ்ஞானிகள் அளித்த விளக்கம்

கோவிட் 19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் பரவலால் உலக நாடுகள் அனைத்தும் கடும் அச்சத்தில் உள்ளன. இவ்வாறு உலக அளவில் பரவி வரும் இந்த கொரோனா வைரஸால் இதுவரை 25,50,000 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த வைரஸ் பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கையானது 1,60,000 க்கு மேல் உயர்ந்துள்ளது. இதனால் பெரும்பாலான உலக நாடுகள் அனைத்தும் சமூக விலகலை கடைபிடிக்கும் விதமாக ஊரடங்கை அறிவித்துள்ளன. உலகின் பெரும்பாலான நாடுகளும் ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ள நிலையில் எல்லா தொழில்களும் முடங்கியுள்ளன.

இந்நிலையில் இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையானது 21 ஆயிரத்தை தொட்டுள்ளது. இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கையானது 681 ஆக உள்ளது. சிகிச்சையில் குணமடைந்து 4257 நபர்கள் வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் இந்த கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் ஏற்கனவே ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி பொது மக்களிடம் சமூக விலகலை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

இதனையடுத்து ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுளதால் அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து மற்ற தொழில்கள் அனைத்தும் முடங்கியுள்ளன. இதில் குறிப்பாக ஆடு, கோழி மற்றும் பன்றி இறைச்சி விற்பனையாளர்கள் மற்றும் விவசாயிகள் அதிகளவில் இந்த ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவில் அதிகளவு பன்றி வளர்ப்பு நடக்கும் மாநிலமான அசாமில், ஜோர்ஹாட், சிப்சாகர், லக்கிம்பூர், தேமாஜி மற்றும் நாகான் ஆகிய மாவட்டங்களில் கிளாசிக்கள் ஸ்வைன் ஃப்ளூ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு வாரத்துக்குள் மட்டும் 1300 பன்றிகள் உயிரிழந்துள்ளன.

இந்த கிளாசிக்கள் ஸ்வைன் ஃப்ளு பன்றிகளுக்கு மட்டுமே தோன்றும் காய்ச்சல் எனவும் சாதாரண ஸ்வைன் ஃப்ளூ அல்லது எச்1 என்1 போன்ற காய்ச்சல்கள் போல மனிதர்களுக்கு பரவாது என்றும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.இந்த வைரஸ் காய்ச்சல் ஆண்டுதோறும் இந்த காலங்களில் பன்றிகளைத் தாக்குவது வழக்கமான ஒன்று தான் என்றும் இந்த ஆண்டு இதன் தாக்கம் அதிகமாக இருப்பதால் அதிகளவிலான பன்றிகள் இறப்புகள் ஏற்பட்டுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பன்றி இறைச்சியை உண்பதால் பரவாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version