உங்கள் கேஸ் அடுப்பு பர்னரை இப்படி சுத்தம் செய்தால் அவை கடையில் வாங்கியது போல் பளிச்சிடும்!!
தினமும் சமைப்பதால் உங்கள் கேஸ் அடுப்பு பர்னரில் அழுக்கு,உணவுகள் படிய அதிக வாய்ப்பு இருக்கிறது.இதனால் பர்னர் விரைவில் பழையதாகி விடும்.
பர்னரை முறையாக சுத்தம் செய்து பராமரித்து வந்தால் புதிய பர்னர் வாங்கும் நிலை ஏற்படாது.
தேவையான பொருட்கள்:-
1)வினிகர்
2)சோடா உப்பு
3)தண்ணீர்
4)எலுமிச்சை சாறு
செய்முறை:-
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஒரு தேக்கரண்டி வினிகர் சேர்த்து கலந்து விடவும்.பின்னர் அதில் கேஸ் பர்னரை போட்டு 30 நிமிடங்கள் ஊற விடவும்.
பிறகு மற்றொரு பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி சோடா உப்பு போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி கலக்கவும்.இதை கொண்டு கேஸ் பர்னரை சுத்தம் செய்யவும்.
அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஓவர் கப் தண்ணீர் ஊற்றவும்.பிறகு அதில் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு எலுமிச்சம் பழத்தின் தோலை போட்டு கொதிக்க விடவும்.
இந்த நீரில் பர்னரை போட்டு 15 நிமிடங்களுக்கு ஊற விடவும்.பிறகு ஒரு காட்டன் துணி கொண்டு துடைத்து எடுக்கவும்.இவ்வாறு செய்தால் பர்னரில் உள்ள அழுக்கு நீங்கி அவை புதிது போன்று பளிச்சிடும்.