பருவநிலை மாற்றம் வேகமாக பரவும் வைரஸ்!! இருமல், காய்ச்சல், தொண்டை வலிக்கு தீர்வு!!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் சளி,இருமல் மற்றும் காய்ச்சல் ஆகியவற்றால் பெரும் அவதிக்குள்ளாகி பல லட்சம் மக்கள் இதனால் இறந்தார்கள். இப்பொழுது கொரோனா முற்றிலும் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. எனினும், சூழலியல் மாற்றங்களால் பரவும் வைரஸ் தொற்றுகள் ஆங்காங்கே பாதிப்பை ஏற்படுத்தி வைரஸ் காய்ச்சல் பரவி வருகின்றன.
சளி, இருமல், காய்ச்சல் போன்றவைதான் இந்த வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகளாகும்.
காரணம்:
பகல் வேளைகளில் அதீத வெப்பமும், மாலை வேளைகளில் மழைப்பொழிவும் என 2 விதமான பருவ சூழல்கள் தமிழகத்தில் நிலவுகின்றன.. கடந்த சில நாட்களாக பருவ நிலையில் மாற்றங்கள் தென்படுவதால், இதன் எதிர்விளைவாக குழந்தைகள், முதியவர்கள், பெண்களுக்கு கடுமையான தொண்டை வலி, உடல் அசதி, காய்ச்சல், சளி பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறதாம். இதையடுத்து மருத்துவமனைகளுக்கு நோயாளிகளாக வருபவரின் எண்ணிக்கையும் அதிகரித்தபடியே உள்ளதாக தகவலை தெரிவிக்கிறார்கள்.
தீர்வு:
1.தொண்டை வலி அதிகமாக உள்ளது என்றால், ஒரு டம்ளர் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்துக் காய்ச்சி குடிக்கும்போது தொண்டை வலிக்கு இதமாக இருக்கும்.
2.இஞ்சி டீ-யில் மிளகுத்தூளை சேர்த்து குடிக்கலாம்.
3.தொண்டை வலி போன்றவற்றிற்கு சிறந்த தீர்வாக துளசி இலைகள் உள்ளன. இலையை அப்படியே சாப்பிடலாம் அல்லது தண்ணீரில் கொதிக்க வைத்து டீ போட்டு குடித்தாலும் இதமாக இருக்கும்.
4. தொண்டை வலியைக் குணப்படுத்த உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது இதனால் தொண்டையில் உள்ள தொற்றுகளைக் கொல்வதற்கும் உதவியாக உள்ளது.
5. ஆப்பிள் சைடர் வினிகரை வெந்நீரில் கொப்பளித்து வந்தாலும் தொண்டை வலியைக் குணப்படுத்துவதோடு வலியையும் குறைக்க உதவியாக இருக்கும் என்கிறார்கள்.