ஆண்,பெண் அனைவரும் தலை முடி வலுவாகவும்,அடர்தியாகவும் வளர பலவகை எண்ணெய்,ஷாம்பு போன்ற பொருட்களை தலைக்கு பயன்படுத்தி வருகின்றனர்.ஆனால் இந்த தவறான பழக்கம் தலைமுடி உதிர்வுக்கு வழிவகுத்துவிடும்.எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிமுறைகளை பின்பற்றினால் தலைமுடி அடர்த்தியாக வளரும்.
தேவையான பொருட்கள்:
1)கிராம்பு அதாவது இலவங்கம்
2)கடுகு எண்ணெய்
3)வேப்பிலை
செய்முறை விளக்கம்:
முதலில் இரண்டு கொத்து வேப்பிலையை வெயிலில் போட்டு நன்கு உலர்த்திக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மூன்று முதல் ஐந்து கிராம்பை வாணலியில் போட்டு லேசாக வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.இதை உரலில் போட்டு கொரகொரப்பாக இடித்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் இரும்பு கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து 200 மில்லி கடுகு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.2 நிமிடங்கள் கழித்து அரைத்த வேப்பிலை மற்றும் கிராம்பை போட்டு குறைவான தீயில் கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும்.பிறகு இந்த எண்ணெயை ஆறவிட்டு வடிகட்டி சேமிக்கவும்.
தினமும் இந்த கிராம்பு எண்ணெயை தலைக்கு அப்ளை செய்து வந்தால் தலைமுடி உதிர்வு பிரச்சனை இன்று அடர்த்தியாக வளரும்.இதில் வேப்பிலை சேர்க்கப்பட்டுள்ளதால் பொடுகு,பேன் போன்ற பாதிப்புகள் ஏற்படுவது கட்டுப்படும்.
அதேபோல் தேங்காய் எண்ணெய்,விளக்கெண்ணெயை சம அளவு எடுத்து சூடாக்கவும்.பிறகு இரண்டு அல்லது மூன்று கொத்து வேப்பிலையை இந்த எண்ணெயில் போட்டு காய்ச்சி அடுப்பை அணைக்கவும்.இந்த எண்ணெயை ஆறவிட்டு ஒரு பாட்டிலில் வடிகட்டி கொள்ளவும்.
பிறகு இந்த எண்ணெயை தலைக்கு அப்ளை செய்து வந்தால் தலைமுடி அதிக அடர்த்தியாக வளரும்.