Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து முதல்வர் ஆலோசனை !! 

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து  வரும் அக்டோபர் 12-ஆம் தேதி ஆலோசனை நடத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அக்டோபர் மூன்றாம் வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை நடத்த அக்டோபர் 12 ஆம் தேதி தமிழக முதல்வர் முடிவு எடுக்கயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நகர்ப்புறங்களில் நீர் தேங்காமல் இருப்பது குறித்தும், மரங்கள் மின்கம்பங்களுடன் இணைக்காமல் இருப்பது குறிக்கும், உணவு தட்டுப்பாடுகள் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக ஏரி, குளங்கள் நிறைந்த தொடங்கியுள்ளது. அதனை தூர்வாரும் பணி மற்றும் கால்வாய் அமைப்பது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

 

Exit mobile version