எடப்பாடி அறிவித்த முக்கிய திட்டம்! மகிழ்ச்சியில் தமிழக இளைஞர்கள்!

0
116

சமூகத்தில் இருக்கின்ற அனைத்து பிரிவினருக்கும் உதவியாக இருப்பது தான் உண்மையான அரசாங்கம் மக்கள் அரசாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம் இவ்விஷயத்தில் இன்று இந்தியாவிலேயே முன்னோடியாக இருப்பது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசுதான்.

அரசு பணியாளர்கள் தொழிலாளர்கள் விவசாயிகள் பெண்கள் வியாபாரிகள் மாணவர்கள் என்று அனைத்து பிரிவினருக்கும் அவரவர் தேவைகள் கோரிக்கை இல்லாமலே நிறைவு செய்து வருகிறது. இந்த அரசு இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 3000 வீதம் வழங்கும் ஒரு திட்டத்தினை முதல்வர் அறிமுகப்படுத்தி இருக்கின்றார்.

இந்தநிலையில், இளநிலை பட்டப் படிப்பினை முழுமையாக முடிக்கும் மாணவர்கள் முழுநேர வழக்கறிஞர்களாக வர வேண்டும் என்றால், குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகாலம் பயிற்சி தேவைப்படுகிறது இந்த நேரத்தில் போதிய வருமானம் இல்லாமல் இளம் வழக்கறிஞர்கள் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருக்கின்றது.

அதிலும் ஒரு சிலர் விட்டால் போதும் என்று வேறு துறையில் தேடி ஓடி விடுகிறார்கள்.

இளம் வழக்கறிஞர்கள் படும் இந்த சிரமங்களை நினைவில் கொண்டு சென்ற ஜூலை மாதம் இரண்டாம் தேதி தமிழக முதல்வர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார்.

அந்த அறிவிப்பில் சட்டப் படிப்பு முடித்து கல்லூரியில் இருந்து வெளியே வரும் வழக்கறிஞர்கள் பார்கவுன்சிலில், நிரந்தரமாக பதிவுச் சான்றிதழ் பெறுவதற்கு முதலில் தேசிய அளவிலான வழக்கறிஞர்கள் குழுமம் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.

அதன் பின்பு வேலை வழக்கறிஞர்களாக மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் இரண்டு அல்லது மூன்று வருட காலம் பயிற்சி பெற வேண்டும்.

ஆகவே சட்டபபடிப்பு பயிலும் மாணவர்கள் அவர்கள் வழக்கறிஞர்களாக பணி செய்வதற்கு குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு வருடகாலம் ஆகிறது.

இதன் காரணமாக கிராமப்புற மற்றும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வழக்கறிஞர்கள் கனவில் வெளிவரும் மாணவர்கள் பாதிப்படைகிறார்கள் ஆகவே இளம் வழக்கறிஞர்களுக்கு இரண்டு வருட காலத்திற்கு, மாதம் 3,000 ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழக அரசின் உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகள் நிர்ணயம் செய்திருக்கிறார்கள்.

இது சம்பந்தமாக கருத்து வெளியிட்ட பல இளம் வழக்கறிஞர்கள் இந்தியாவிலேயே பல மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம்தான் முன்னிலை பெற்ற மாநிலமாக இருந்து வருகின்றது.

அந்த வகையில் இளம் வழக்கறிஞர்களுக்கு வழங்கும் இந்த உதவித் தொகை திட்டத்தின் மூலம் போராடாமல் எதையும் பெற்றுவிட முடியாது என்று சொல்வார்கள், இந்த கருத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொய்யாக்கி வருகின்றார்.

எந்தவித ஆர்ப்பாட்டமும் போராட்டமும் இல்லாமல் இந்த மாபெரும் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வரும் முதல்வரின் செயலால், உண்மையிலேயே அன்பு உள்ளம் கொண்ட அம்மாவின் அரசு தான் என்று தெரிவிக்கிறார்கள்