செப்டம்பர் 8-ல் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை:! லாக்டவுன் தளர்வுகள் மேலும் விரிவாக்கப்படுமா?

0
112

செப்டம்பர் 8-ல் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை:! லாக்டவுன் தளர்வுகள் மேலும் விரிவாக்கப்படுமா?

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்திலிருந்து தற்போது வரை எட்டு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஏழாம்கட்ட ஊரடங்கு நிறைவு பெற்ற நிலையில்,செப்டம்பர் 1-ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 30-ஆம் தேதி வரை எட்டாம்கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மக்களின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு எட்டாம் கட்ட ஊரடங்கில் தமிழக முதல்வரால்,பொது போக்குவரத்து இயக்கம்,வழிபாட்டு தளங்கள் திறப்பு,மால்கள் திறப்பு,போன்ற பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் மென்மேலும் நோய் பரவும் அபாயம் அதிகம் உள்ளதால்,வருகின்ற செப்டம்பர் எட்டாம் தேதி காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆலோசனை நடத்தவுள்ளதாக வெளியாகியுள்ளது.

ஊரடங்கு தளர்வுகளால், கொரோனா பாதிப்பு அதிகரித்தால் அதற்கேற்ப மருத்துவ வசதிகளை தயார்படுத்துவது குறித்தும்,மேலும் நோய் பரவாமல் தடுப்பது குறித்தும் பேசப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.மேலும் மக்களின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் ஏற்கனவே தளர்வுகள் அறிவித்த நிலையில் கூடுதல் தளர்வுகள் பற்றி ஆலோசிக்கலாம் எனவும் தெரிகின்றது.