முருகேசன் குடும்பத்திற்கு முதல்வர் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி!

0
139

சேலம் மாவட்டத்தில் காவல் அதிகாரி பெரியசாமி தாக்கியதில் உயிரிழந்துள்ள விவசாயி முருகேசன் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்து மு க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சேலம் பாப்பநாயக்கன்பட்டி சோதனை சாவடியில் விவசாயி முருகேசன் என்பவர் நேற்று குடிபோதையில் வந்துள்ளார். அப்போது அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் மிகவும் குடித்துவிட்டு அவதூறாக பேசி இருந்துள்ளார். இதனால் காவல் உதவியாளர் மற்றும் முருகேசனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகாத வார்த்தைகளில் பேசியதால் ஆத்திரமடைந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி முருகேசனை மிகவும் கடுமையாக தாக்கியுள்ளார்.

ஏற்கனவே மதுபோதையில் இருந்த முருகேசன் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி அடித்ததில் மயங்கி சம்பவ இடத்திலேயே விழுந்துள்ளார்.

பின் அவரை போலீசார் சேலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முருகேசன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் உதவி ஆய்வாளர் பெரியசாமியை பணி நீக்கம் செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தை கேள்வியுற்ற முதல்வர் உயிரிழந்த முருகேசன் விவகாரத்தில் குற்றம் இழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் அளித்துள்ள அறிக்கையில் முருகேசனின் இறப்பு செய்தியை கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததோடு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை அவர்களின் குடும்பத்திற்கு தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விவசாய முருகேசன் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளார். மேலும் உதவி ஆய்வாளர் பெரியசாமி மீது குற்ற வழக்கு பிரிவின் கீழ் வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.