தேர்தல் தொடர்பான பேச்சுக்கள் தொடங்கியதிலிருந்தே தமிழகத்தில் தேர்தல் தொடர்பான பரபரப்பு தொற்றிக்கொண்டது.அந்த வகையில், சமீபகாலமாக பல சம்பவங்கள் தமிழக தேர்தல் காலத்தில் நிலவி வருகிறது. ஆளுங்கட்சியினர் எதிர்க்கட்சியை விமர்சனம் செய்வதும் எதிர்கட்சி ஆளும் கட்சியினரை விமர்சனம் செய்வதும் அடுத்தடுத்து நிகழ்ந்து வருகிறது.இதனால் அரசியல் கட்சிகளிடையே மட்டும் அல்லாமல் அந்தந்த கட்சிகளை சார்ந்த சாதாரண தொண்டர்கள் வரையிலும் கூட அவர்களின் பிரச்சாரம் தாக்கத்தை உருவாக்கி இருக்கிறது. இந்த தாக்கம் எந்த அளவிற்கு அந்த கட்சியை சேர்ந்தவர்களுக்கு பலனளிக்கும் என்று தெரியவில்லை.
ஆளும் கட்சியான அதிமுக சார்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதோடு அவர் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பிருந்தே நோய்த்தொற்றை கூட கண்டுகொள்ளாமல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். இதன்மூலம் தமிழக மக்களிடையே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமோக வரவேற்பை பெற்று இருக்கிறார்.அதோடு அவர் தற்பொழுது தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வரும் பிரச்சாரத்திலும் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு இருப்பதாக சொல்கிறார்கள். ஆகவே எதிர்கட்சியான திமுக பெரும் அதிர்ச்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஆகவே அந்தக் கட்சியினர் எதை பேசுகிறோம் என்ன நடக்கிறது என்பதை கருத்தில் வைக்காமலே அதிமுகவிற்கு எதிராக பல அவதூறு கருத்துக்களை போகுமிடமெல்லாம் தெரிவித்து வருகிறார்கள். அதன் காரணமாக, திமுக மீது மக்களிடையில் பெரிய அளவில் அதிருப்த்தி இருந்து வருவதாக சொல்கிறார்கள்.இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பிரச்சாரம் தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி அன்று கூடலூர், உதகை, கொடிசியா, கோவை பெருந்துறை, பள்ளிபாளையம் போன்ற பகுதிகளில் அதிமுகவின் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வாக்கு சேகரிக்க இருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதோடு ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கு பெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்க இருக்கிறார். அன்றுமாலை சேலம், சங்ககிரி, வீரபாண்டி போன்ற பகுதிகளில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார். இதனையடுத்து சேலம் கோட்டை மையத்தில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி.
ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரிக்கும் விதமாக பிரச்சாரம் செய்யும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, எடப்பாடி, ஓமலூர், மேட்டூர், போன்ற பகுதிகளில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார். வரும் நான்காம் தேதியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு பெற இருப்பதால் அன்றைய தினம் காலை முதல் மாலை 3 மணி வரை எடப்பாடி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
எடப்பாடி பழனிச்சாமி எடுத்த அதிரடி முடிவு! அதிமுக தலைமை கழகம் அறிவிப்பு!
