Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அனைத்து பந்துகளிலும் சிக்சர் அடிக்கும் முதல்வர்! அதிர்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர்!

தமிழ்நாட்டிலே தேர்தல் நெருங்கி வருவதால் நாளுக்குநாள் அரசியல் கட்சிகளின் பிரச்சாரமும் அதிகரித்து வருகிறது. அந்த விதத்தில் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுடைய பிரசாரத்தை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் பாஜகவின் வேட்பாளரான பூண்டி வெங்கடேசனை ஆதரிக்கும் விதமாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்தார். அந்த சமயத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றும்போது விவசாய பெருங்குடி மக்கள் அனைவரும் சமீபத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் நடைமுறைபடுத்தபட்டுவிடுமோ என்று மிகுந்த பயத்தில் இருந்தார்கள்.

அவர்கள் வந்தால் இங்கே நம்முடைய நிலம் பறிபோய்விடுமோ என்று நினைத்துக்கொண்டிருந்த விவசாயிகளுக்கு நிம்மதி தரும் விதமாக தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அதற்கு சட்டம் இயற்றப்பட்டது என்று தெரிவித்திருக்கிறார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.அந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடைசெய்தது எங்களுடைய அரசாங்கம் தான் ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்புதலை வழங்கியது திமுக ஆட்சிக் காலத்தில்தான் என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

அதேபோல காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஆகியோர் நமக்கு இந்த நீர் மேலாண்மை இத்திட்டத்திற்கு உதவி புரிவதாக உறுதி அளித்திருக்கிறார்கள்.

அதேபோல பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் நமக்கு அனைத்து விதமான திட்டங்களையும், வசதிகளையும் செய்து தருவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.அதேபோல முதல்வர் செல்லுமிடமெல்லாம் அவருக்கு ஆதரவு பெருகி வருவதும் அதேபோல அவர் செய்யும் பிரச்சாரத்தின் மூலமாக தமிழகத்திலே திமுகவிற்கு ஆதரவு சிறிதுசிறிதாக சரியத் தொடங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் எதிர்க்கட்சியான திமுகவின் தலைமை திகைப்பில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version