கோவிலுக்கு அருகில் குடியிருப்போரின் நலனை யோசித்து கோவில் மனைகளை தமிழக அரசு முதலில் விலைக்கு வாங்கி அதன் பிறகு அதனை முறைப்படுத்த முடிவு செய்து இருக்கின்றது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இருக்கின்றன. இந்த நிலையில், இந்த நிலங்களில் வீடு கட்டி பல வருடங்களாக குடியிருந்து வரும் மக்கள் ஏராளம்.
அப்படி வசித்து வருவோர் பட்டா கேட்டால், அது அறநிலையத்துறை இடம் என்பதால் பட்டா கொடுப்பதற்கு மறுத்து விடுகிறார்கள்.
இதன் காரணமாக மக்கள் தாங்கள் பல வருடங்களாக அங்கேயே வசித்து வருவதால், எங்கள் வசம் அந்த நிலத்தை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
ஆட்சேபனை அற்ற நிலங்களை முறைப்படுத்த அரசு முடிவு செய்து இருக்கின்றது. அதிலும் குறிப்பாக, புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு தமிழக அரசு சார்பாக பட்டா வழங்க முடிவு எடுக்கப்பட்டு இருக்கின்றது.
அதில் கோவில்களுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களை அரசு கோயில் நிர்வாகத்திடம் இருந்து விலைக்கு வாங்கிய அதன் பிறகு அதனை முறைப்படுத்த தமிழக அரசு முடிவு செய்து இருக்கின்றது.
திருவள்ளூர் மாவட்டத்தில், 409 நகரப்பகுதிகளில் 12 , இடங்களும் சென்னை நகர்புற பகுதிகளில் 36 , இடங்களும் காஞ்சிபுரத்தில் 123 ,இடங்களும் வேலூரில் 107 இடங்களும் தர்மபுரியில் 70 ,இடங்களும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 350 ,இடங்களும் விழுப்புரம் மாவட்டத்தில் 948 ,இடங்களும் கோவை மாவட்டத்தில் 308 ,இடங்களும் நாமக்கல் மாவட்டத்தில் 110 ,இடங்களும் ஈரோடு 291 , பெரம்பலூர் 204 ,இன்று ஊரகப் பகுதிகளில் மொத்தமாக 18 , ஆயிரத்து 86 ,இடங்களும் நகர்ப்புற பகுதிகளில் 76 ,இடங்களும் முறைப்படுத்த பட இருக்கின்றது.