Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முதல்வருக்கு கொரோனா பாதிப்பு!

முதல்வருக்கு கொரோனா பாதிப்பு!

அருணாச்சலப் பிரதேச முதல்வர் பீமா காண்டுவிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நோயை கட்டுப்படுத்த மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சாதாரண பொதுமக்கள் உள்பட பிரபலங்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முதல்வர்கள் என பலரும் இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அருணாச்சலப் பிரதேச முதல்வர் பீமா காண்டுவிற்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

https://twitter.com/PemaKhanduBJP/status/1305850427565506561?s=20

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கொரோனா அறிகுறி ஏதும் இல்லாமல் தொற்று உறுதி செய்யப்பட்டதால் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். மேலும், கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

Exit mobile version