பாரதிய ஜனதா கட்சியின் வேல் யாத்திரை விவகாரத்தில் முதல்வர் ராஜதந்திரத்துடன் செயல்பட்டு இருப்பது பலருடைய பாராட்டுகளையும் பெற்று இருக்கின்றது.
சமூக நல்லிணக்கத்தை முதல்வர் பாதுகாத்து இருப்பதாக பல தரப்பினரும் தெரிவித்து வருகிறார்கள்.
இந்துக்களுடைய எதிரிகளை அடையாளம் காட்டவும், மத்திய அரசு உடைய திட்டங்களை மக்களுக்கு எடுத்துக் கூறவும், திருத்தணியில் இருந்து வேல் யாத்திரை ஆரம்பிக்க போவதாக தமிழக பாஜகவின் தலைவர் தெரிவித்திருந்தார்.
இந்த யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று அரசியல் கட்சிகள் அனைத்தும் வலியுறுத்தினர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு கூட தொடரப்பட்டது வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்தப் பிரச்சினையில் தமிழக அரசே முடிவு எடுக்கலாம் என்று தெரிவித்தது.
இதனை அடுத்து அனைவருடைய பார்வையும் முதல்வர் மீது திரும்பியது மத்தியில் ஆளும் கட்சி என்ற காரணத்தால், பாஜக யாத்திரைக்கு முதல்வர் அனுமதி வழங்காமல் இருக்க முடியாது.
அப்படி செய்வதற்கு அவருக்கு தைரியம் இல்லை என்று பலர் விமர்சனம் செய்து வந்தனர்.
இதற்கு மத்தியில் திடீர் பயணமாக ஆளுநர் டெல்லி சென்ற காரணத்தால், பரபரப்பு ஏற்பட்டது.
திருத்தணி போக இருந்த முருகன் உள்பட பாஜகவினர் அனைவரையும் சென்னையிலேயே கைது செய்து விடலாம் என்ற காவல்துறையினரின் யோசனையை முதல்வர் ஏற்கவில்லை.
ஒன்றுமே இல்லாத பிரச்சனைக்கெல்லாம் ஸ்டாலின் போராட்டம் நடத்திய போது அதற்கு அனுமதி கொடுத்து விட்டு, இப்போது பாஜக யாத்திரையை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்துவது சரியில்லை என்ற முதல்வரின் கூற்று ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இதற்குப் பிறகே முருகன் திருத்தணி செல்வதற்கு அனுமதிக்கப்பட்டார் அதிலும் திருத்தணி நெருங்கிய போது ஐந்து வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது சாமி தரிசனம் முடிந்து யாத்திரையை தொடங்கிய போது முருகன் உள்பட பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த செயலை பாஜகவினர் சற்றும் எதிர்பார்க்கவில்லை, அதன் பின்பு மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இது சம்பந்தமாக கருத்து சொன்ன பலரும் பொங்கிய ஒரு பிரச்சனையை முதல்வர் தன்னுடைய சாதுரியமான நடவடிக்கையால் அமைதியாகிவிட்டார். இந்து எதிர்ப்பாளர்களை அடையாளம் காட்டுவது உள்பட வேல் யாத்திரையின் நோக்கமானது நல்லது என்றாலும், கூட கொரோனா காலத்தில் ஒரு பெரிய கூட்டத்தை கூட்டுவதால் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது.
அதேசமயம், தொடக்கத்திலேயே யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டால் இந்து உணர்வுகளுக்கு எதிராக இருக்கும் அரசு என்று முத்திரை குத்தி விடுவார்கள்.
இவற்றையெல்லாம் சரியாக கணித்து தான், சாமர்த்தியமாக இந்த நடவடிக்கை எடுத்து இருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
கைது மற்றும் தடை போன்ற நடவடிக்கைகள் மூலமாக சிறுபான்மையினரின் நம்பிக்கையும் எடப்பாடியார் மீது இருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும்.
அனைத்தையும் விட மிக முக்கியமான விஷயம் சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதில் உறுதியுடன் அரசு இருந்திருக்கிறது. இது யாருடைய உத்தரவுக்கும் தலையாட்டும் அரசு கிடையாது என்பதை ஆணித்தனமாக நிரூபித்துக் காட்டி இருக்கின்றார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்று கூறுகிறார்கள்.