வைப்பு நிதி திட்டத்தை தொடங்கிய முதல்வர்! குழந்தைகள் கண்ணீர் மல்க பேட்டி!

0
129
CM launches deposit fund scheme Interview with Kids Tear Malka!

வைப்பு நிதி திட்டத்தை தொடங்கிய முதல்வர்! குழந்தைகள் கண்ணீர் மல்க பேட்டி!

கொரோனா தொற்றானது இரு ஆண்டுகாலமாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.அந்தவகையில் கொரோனா தொற்றின் முதல் அலையில் முன் கூட்டியே பலவித நடவடிக்கைகளை மேற்கொண்டதால் பல ஆயிரம் கணக்கான உயிர் இழப்புகளிலிருந்து மக்களை காப்பாற்ற முடிந்தது.அதனையடுத்து மீண்டும் மக்கள் வெளியே செல்லும் போது கொரோனா என்பது ஒன்றை மறந்து சாதரணமான வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிட்டனர்.

அதன் விளைவாக கொரோனாவின் இரண்டாவது அலை உருவானது.இந்த 2-ம் அலையில் மக்கள் பல ஆயிரம் கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.இந்த இரண்டாம் அலையில் மக்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் இன்றியும்,படுக்கை வசதிகள் இன்றியும் பெருமளவு சிரமத்திற்குள்ளாகினர்.ஆக்சிஜன் வசதி இன்றி மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர்.குறிப்பாக இந்தியாவில் பல மாநிலங்களில் இறந்த கொரோனா நோயாளிகளை எரிப்பதற்கு இடமில்லாமல் அலைமோதி வந்தனர்.

அதனால் மக்கள் நலனுக்காக பல மாநிலங்களில் கொரோனா நிதி வழங்கப்பட்டு வருகிறது.அந்தவகையில் நம் தமிழ்நாட்டில் நமது முதல்வர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்,அதில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது,நமது தமிழ்நாட்டில் கொரோனா தொற்று காரணமாக தாய்,தந்தையை இழந்த குழந்தைகளுக்கு வைப்பு நிதியாக ரூ.500000 வழக்குமாறு தெரிவித்திருந்தார்.அதன் அடிப்படையில் இன்று சென்னை தலைமை செயலகத்தில் தாய் தந்தையை இழந்த 10 குழந்தைகளுக்கு ரூ.500000 வழங்கி வைப்பு நிதி திட்டத்தை தொடங்கி வைத்தார்.அப்போது நிதியை பெற்ற குழந்தைகள் கண்ணீர் மல்க செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தனர்.