Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வளர்ச்சித் திட்டப் பணிகளை கண்காணிக்க அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்! முதல்வர் அதிரடி உத்தரவு!

திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டதில் இருந்து தமிழகத்தில் பல விஷயங்களை செயல்படுத்தி வருகிறது இதனால் பொதுமக்களிடையே முதலமைச்சர் ஸ்டாலின் இமேஜ் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. உதாரணமாக, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், தமிழில் அர்ச்சனை, அதோடு இன்னும் பல விஷயங்களை கண்ணும் கருத்துமாக செய்து வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.அதோடு மாவட்டங்கள் தோறும் இந்த திட்டங்களை முறையாக செயல்படுகிறார்களா என்பதையும் முதலமைச்சர் ஸ்டாலின் கண்காணித்து வருவதாக சொல்லப்படுகிறது.

அந்த இடத்தில் தமிழ் நாட்டில் வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தும் அதற்காக அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள், மாவட்டங்களில் வழங்கப்படும் உதவிகளை கண்காணிப்பதற்காக இயற்கை சீற்றம், நோய் தொற்று மற்ற பல நேரங்களில் அவசர கால பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பதாக தெரிகிறது.

அதனடிப்படையில் வருவாய் மாவட்ட வாரியாக பின்வரும் அமைச்சர்கள் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். சேலம் மாவட்டத்திற்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே என் நேரு பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

தேனி மாவட்டத்திற்கு கூட்டுறவு புள்ளியியல் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி, திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் ஏவ வேலு அவர்களும் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

தர்மபுரி மாவட்டத்திற்கு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தென்காசி மாவட்டத்திற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஊரகத் தொழில் துறை அமைச்சர் தாமோ அன்பரசன் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்திற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெள்ளிதோறும் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

அதேபோல திருவாரூர் மாவட்டத்திற்கு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, கோயமுத்தூர் மாவட்டத்திற்கு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி உள்ளிட்டோரும் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

அதேபோல பெரம்பலூர் மாவட்டத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார், தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கொண்டு வரும் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்கள்.

Exit mobile version