Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆய்வுகள் தொடரும் முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி! அரசு அதிகாரிகள் அதிர்ச்சி!

டெல்டா மாவட்டங்களில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளை பார்வையிடுவதற்காக டெல்டா மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு வருகின்ற முதலமைச்சர் ஸ்டாலின், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், உள்ளிட்ட மாவட்டங்களில் பாசன வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளை இன்று ஆய்வு செய்யவிருக்கிறார்.

தஞ்சை, நாகை, உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் தூர்வாரும் பணிகளை அவர் நேரில் பார்வையிடுகிறார்.

அதோடு முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சிக்கு நேற்றைய தினம் பயணம் மேற்கொண்டார். விமான நிலையத்தில் வந்திறங்கிய முதலமைச்சருக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாகமான வரவேற்பு வழங்கப்பட்டது.

இதனையடுத்து திருச்சி மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் அங்கே ஆய்வுகளை மேற்கொண்டார். மாநகர ஆணையர் அலுவலகத்தில் அமர்ந்த முதலமைச்சர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

இதனைத்தொடர்ந்து அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.

பின்பு அங்கு ஆய்வை முடித்துக் கொண்டு தஞ்சாவூருக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் அம்மாபேட்டை அருகேவுள்ள கொக்கேரி கிராமத்தில் பீமனோடை வடிகால் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார் .

14,50000 ரூபாய் மதிப்பீட்டிலான செலவில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்து உத்தரவுகளை பிறப்பித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இதற்கு நடுவில் பொதுமக்கள் மனநிறைவுடன் செல்வதை உறுதிப்படுத்துவதற்காக அரசு அலுவலகங்களில் தன்னுடைய ஆய்வுகள் தொடரும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் தன்னுடைய வலைப்பதிவில் தெரிவித்திருப்பதாவது அரசு அலுவலகங்கள் மருத்துவமனைகளுக்கு வரும் பொதுமக்கள் மனநிறைவுடன் திரும்பி செல்ல வேண்டும் எனவும், அப்படி பணியாற்ற வேண்டியது அரசு ஊழியர்களின் கடமை எனவும், முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். ஆகவே அவருடைய ஆய்வுகள் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version