Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தலைநகர் டெல்லியில் கால்பதித்த முதலமைச்சர்! அங்கே முதல்வரின் திட்டம் என்ன இதோ விரிவான பட்டியல்!

திமுக தொடங்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரையில் தமிழக அரசியலில் மட்டுமே தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது. ஆனாலும் புதுச்சேரியிலும் இன்று கட்சி தன்னுடைய கிளையை தொடங்கி நடத்தி வருகிறது.

ஆனாலும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் இதுவரையில் சொல்லிக்கொள்ளுமளவிற்கு திமுக வளரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அங்கே திமுகவை விட அதிக பலம் வாய்ந்த கட்சிகள் பல இருக்கின்றன.

ஆனால் தமிழகத்தைப் பொறுத்த வரையில் திமுக பலமுறை ஆளுங்கட்சியாக இருந்திருக்கிறது தற்போதும் அந்த கட்சிதான் ஆண்டு கொண்டிருக்கிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் முதல்முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றிருக்கிறார் அவருடைய நிர்வாகத்தின் கீழ் மாநில அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில். தேசிய அரசியலில் கால் பதிக்க ஸ்டாலின் முடிவு செய்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது ஆகவே அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் இவருடைய வியூகம் வேறுமாதிரியாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

அதன் முதல் கட்டமாக தலைநகர் டெல்லியில் கட்டப்பட்டிருக்கின்ற திமுக அலுவலகமான அண்ணா- கலைஞர் அறிவாலயம் திறப்பு விழா ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

இந்த சூழ்நிலையில். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நள்ளிரவில் டெல்லி சென்றார் என்று சொல்லப்படுகிறது. அங்கே அவருக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிர்வாகிகள் உள்ளிட்ட உற்சாக வரவேற்பு வழங்கினார்கள்.

இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் இன்று பிற்பகல் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அவர் பேசுகிறார் அப்போது நீட்தேர்வு மேகதாது அணை, ஜிஎஸ்டி நிலுவைத்தொகை, உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் வழங்கவிருக்கிறார் என சொல்லப்படுகிறது.

அதோடு டெல்லியில் ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி புதிதாக திறக்கப்படும் அண்ணா. கலைஞர் அறிவாலயம் திறப்பு விழாவில் பங்கேற்கவும் அழைப்பு விடுக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல், உள்ளிட்டோரை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து உரையாற்றுகிறார்.

ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி திமுக வின் அலுவலகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். விழாவை முடித்துக்கொண்டு அன்றிரவு டெல்லியிலிருந்து விமானம் மூலமாக ஸ்டாலின் சென்னை திரும்பவிருக்கிறார்.

Exit mobile version