முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய தாய் மாமா தட்சணாமூர்த்தியின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து முகநூல் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், தன்னுடைய தாய் மாமாவும், கழக பற்றாளருமான தட்சணாமூர்த்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவருக்கு 100வது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தேன் என கூறியிருந்தார்.
அதோடு திருவாரூர் மாவட்டத்தில்தான் எப்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும் தன் மீது மிகுந்த பாசமும் மற்றும் கொண்ட அவரை சந்தித்து நலம் விசாரிப்பது வழக்கம் எனவும் குறிப்பிட்டுள்ளார். அவரும் தான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் வருகை தந்து தன்னை நலம் விசாரிப்பார் என்றும் பதிவு செய்துள்ளார். தன்னுடைய வாழ்நாளில் நூற்றாண்டுகளை கண்டுள்ள அவருடைய நினைவாற்றல் இன்றும் தன்னை வியக்க வைப்பதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், நடப்பு விவரங்களை விரல் நுனியில் வைத்து பேசுவார் என்றும் தெரிவித்திருக்கிறார்.
அத்துடன்”, அவருடைய 100வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன், அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் எங்களோடு மேலும் பல்லாண்டு காலம் பயணம் செய்ய இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.