Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திருச்சி சுற்று வட்டார பகுதியில் பெய்த கன மழை! வெள்ளத்தில் மிதக்கும் மணப்பாறை!

திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்தது இதன் காரணமாக, இந்த பகுதிகளில் இருக்கின்ற நீர்நிலைகள் நிரம்பி இருக்கின்றன. இந்த சூழ்நிலையில், சென்ற மூன்று நாட்களாக வெயில் அடித்து வந்தது. இந்த நிலையில், நேற்று காலை முதல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை காலை 6 மணிக்கு தொடங்கி 9 மணி வரையில் சுமார் 27.45 சென்டிமீட்டர் அளவில் இதன் காரணமாக, மணப்பாறையில் எந்தப் பக்கம் பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி தந்தது சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.

மணப்பாறை ராஜீவ் நகரில் இருக்கின்ற அப்பு அய்யர் குளத்தில் உடைப்பு உண்டாகி குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்து கொண்டது. அதேபோல கருங்குளம் பகுதியில் குளத்து நீரை ஓரமாக வெட்டி விட்டதால் அந்த நீரும் ஆர்ப்பரித்து வெளியேறியது. இதன் காரணமாக, மணப்பாறை பேருந்து நிலையம் முன்பு சுமார் 3 அடி உயரம் வரையில் தண்ணீர் தேங்கி நின்றது. கடைகளுக்கு உள்ளும் மழைநீர் புகுந்து கொண்டது, சாலைகளில் மழைநீர் ஆறு போல ஓடியதால் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற இயலாமல் கடுமையான சிரமத்திற்கு ஆளானார்கள்.

மணப்பாறை பேருந்து நிலையத்தில் மழை நீர் அதிக அளவில் தேங்கி நின்றது. இதன் காரணமாக, ஏராளமான இருசக்கர வாகனங்கள் பழுது ஆகியிருக்கின்றன. இதனால் வாகனங்களை தள்ளிக் கொண்டு செல்லும் சூழ்நிலை உண்டானது. அதே போல நான்கு சக்கர வாகனங்களும் தடுமாறியபடி சென்றது பேருந்து நிலையத்திற்குள் செல்ல முடியாததால் பேருந்துகள் அனைத்தும் திண்டுக்கல் சாலை, திருச்சி சாலை, கோவில்பட்டி சாலை, மதுரை சாலை ,உள்ளிட்ட சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்லப்பட்டார்கள். இதன் காரணமாக, பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. இது மட்டுமல்லாமல் நகரில் வாகனங்கள் இல்லாத சூழல் காணப்பட்டது.

அதேபோல மணப்பாறையை அடுத்த சித்தாநத்தம் பகுதியில் இருக்கின்ற 2 தரை பாலங்கள் முழுகி நீர் முழுவதுமாக வெளியேறியதால் போக்குவரத்து முழுமையாக தடைபட்டது. தேனி மாவட்டத்தில் தேனி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், போடி, கம்பம், கூடலூர், உத்தமபாளையம் என்று மாவட்டம் முழுவதும் நேற்று விடிய, விடிய பலத்த மழை பெய்தது. கொட்டகுடி, முல்லைப் பெரியாறு, வைகை உள்ளிட்ட ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு உண்டானது. மழையால் 85 வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன, 46 ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் நீரில் மூழ்கி இருக்கின்றன.

Exit mobile version