Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு! முதலமைச்சர் ஸ்டாலின் மகிழ்ச்சி

மத்திய அரசு மாநிலங்களுக்கு தடுப்பூசிகளை இலவசமாக வழங்கும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்து இருக்கிறார்.

நேற்றைய தினம் மாலை 5 மணி அளவில் தொலைக் காட்சியின் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அந்த சமயத்தில் மாநிலங்களுக்கு ஜூன் மாதம் 21ம் தேதியிலிருந்து இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் 75% தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து நேரடியாக மாநிலங்களுக்கு வழங்கும் 25 சதவீத தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகள் கொள்முதல் செய்து கொள்ளலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்த அறிவிப்பிற்கு பல மாநில முதலமைச்சர்கள் வரவேற்பு தெரிவித்து இருப்பதாக தெரிகிறது.

இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய வலைதள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, மாநிலங்களுக்கு மத்திய அரசு இலவசமாக தடுப்பூசி வழங்கும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. நாட்டில் உற்பத்தியாகும் தடுப்பூசிகளின் 75 சதவிகித தடுப்பூசிகளை மத்திய அரசு நேரடியாக கொள்முதல் செய்து அவற்றை மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் என்று அறிவித்து இருக்கின்றார். தடுப்பூசி கொள்முதலில் இதற்கு முன்னால் இருந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதற்காக பிரதமரை பாராட்டுகின்றேன். அதேபோல தடுப்பூசி முன்பதிவு தடுப்பு செலுத்துவது நிர்வாகம் மற்றும் நடைமுறைகள் போன்றவற்றை எல்லா மாநிலங்களின் கட்டுப்பாட்டிலும் விட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அதேபோல கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தன்னுடைய வலைப்பக்கத்தில் ஜூன் மாதம் 26 ஆம் தேதியில் இருந்து இலவச நோய் தடுப்பூசி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்திருப்பது இந்த சமயத்தில் மிகவும் நன்மை விளைவிக்கும் விஷயமாக இருக்கும். எங்களுடைய வேண்டுகோளுக்கு பிரதமரிடம் இருந்து சாதகமான பதில் கிடைத்திருப்பதால் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அதனுடைய வலைதளப் பக்கத்தில் 18 வயதுக்கும் அதிகமான எல்லோருக்கும் இலவச தடுப்பூசி பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டம் நீட்டிப்பு போன்றவற்றை அறிவித்த பிரதமருக்கு நன்றி இது நோய் தொற்றினை எதிர்க்கும் போரில் உதவிகரமாக இருக்கும் என்று பதிவிட்டிருக்கிறார்.

Exit mobile version