Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கடலூரில் அதிக பாதிப்பு ஏன் முதல்வர் தெரிவித்த விசித்திர காரணம்!

கடலூரில் புயல் பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்.

நிவர் மற்றும் புரெவி ஆகிய புயலின் காரணமாக கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டு இருக்கின்றது ஒரு லட்சம் ஏக்கருக்கு அதிகமான விளைநிலங்களில் இருந்த பயிர்கள் மழை நீரில் முழுகி சேதமடைந்து இருக்கின்றன இந்த நிலையில் வெள்ள பாதிப்பினை ஆய்வு செய்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் கடலூர் சென்றடைந்தார்.

மாவட்ட எல்லையான ரெட்டிச்சாவடி அமைச்சர் எம் சி சம்பத் தலைமையிலான அதிமுகவினர் முதல்வருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளித்தார்கள் இதனை தொடர்ந்து பெரிய பட்டியில் அமைக்கப்பட்ட மழை சேதங்கள் குறித்த புகைப்படங்களை பார்வையிடுவதற்காக முதல்வர் அனுப்பும்படி புயல் மற்றும் மழையால் வேளாண் நிலங்களில் ஏற்பட்டிருக்கின்ற பயிர் சேதங்களை வயலில் இறங்கி ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பின்னர் காட்டுமன்னார்கோவில் வட்டம் லால்பேட்டை பகுதியில் வீராணம் ஏரியில் இருந்து உபரி நீர் வெள்ளியங்காடு ஓடை வழியாக வெளியேறுவதை ஆய்வு செய்த முதல்வர் ராதாமதகு பகுதியிலிருந்தும் ஆய்வு செய்தார் திருநாரையூர் தொகுதிகளையும் அவர் பார்வையிட்டார்.

சிதம்பரம் வட்டம் சாலியன் தோப்பு கிராமத்தில் கனமழை மற்றும் புயல் காரணமாக வேளாண் நிலங்களில் ஏற்பட்டிருக்கின்ற பயிர் சேதங்களை பார்வையிட்ட அவர் கடவாச்சேரி உப்பனாறு வடிகாலில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் ஆகாய தாமரைகளை அகற்றும் பணிகளை ஆய்வு செய்தார் அதோடு ஆகாயத் தாமரைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறார் முதல்வர்.

சிதம்பரத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட இருக்கின்ற இளமையாக்கினார் திருக்கோவிலின் குளக்கரை தடுப்புச்சுவர் மற்றும் அதனை ஒட்டிய சேதமடைந்த சாலை பகுதியையும் பார்வையிட்ட முதல்வர் அதன் பின்பு வல்லம்படுகை யில் புயல் மற்றும் மழை யால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி இருக்கின்றார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் கனமழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் சம்பந்தமான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டு இருக்கின்றது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கும் என்று தெரிவித்தார் முதல்வர்.

தமிழகம் வந்திருக்கின்ற மத்திய குழுவினர் நிவர் புயல் தொடர்பாக ஆய்வு செய்து வருகிறார்கள் அவர்களிடம் புயல் பாதிப்பிற்கு உரிய நிவாரண நிதியை கேட்டிருக்கின்றோம் அதை மத்திய அரசிடம் எடுத்துக் கூறி பெற்றுத்தருவதாக தெரிவித்து இருக்கிறார்கள் புரெவி புயல் தொடர்பாக ஆய்வு செய்வதற்கு மத்திய குழு வருகை தர வேண்டும் என கோரிக்கை விடுத்து இருக்கின்றோம்.

மத்திய அரசு பேரிடர் நிதியை கொடுத்திருக்கின்றது அதிலிருந்துதான் செலவு செய்து கொண்டிருக்கின்றோம் அதிகமான பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் அதிக நிதியை கேட்டிருக்கின்றோம் இப்போது மத்திய குழு பார்வையிட்டு இருக்கின்றது இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையிலேயே மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்று தெரிவித்தார் முதல்வர்.

நீண்டகாலத் திட்டமாக கடலூரில் நீர் வடிவதற்க்காக 400 கோடி ரூபாய் திட்டத்தை செயல்படுத்தி இருக்கின்றோம் கன மழை பெய்தால் அந்த தண்ணீர் எங்குதான் செல்லும் இது ஒரு சமவெளி பரப்பு புயலின் போது கடலின் நீர்மட்டம் உயர்கின்றது இதன் காரணமாக நீர் கடலுக்குள் செல்வது கிடையாது என்ற காரணத்தால் பாதிப்பு அதிகமாக இருக்கின்றது என தெரிவித்திருக்கின்றார்.

அதோடு வடிகால் வசதி செய்து வேளான் மக்கள் விளைநிலங்களை பாதிக்காத வண்ணம் திட்டம் போடுவதற்கு உண்டான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன அதற்காக தான் நானுறு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கின்றது இரண்டாவது கட்டமாக எந்தெந்த பகுதிகளில் நீர் வெளியேறாமல் இருக்கின்றதோ அங்கே ஆய்வு செய்து எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்படாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார் முதல்வர்.

Exit mobile version