தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல், காரணமாக கடந்த 10ஆம் தேதி முதல் வரும் 24ஆம் தேதி வரையில் முழு உரை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கிறது. ஹோட்டல்களில் பார்சல் சேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
அத்தியாவசிய பொருட்கள் தயார் செய்யும் தொழிற்சாலைகள் மட்டும் செயல்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. எல்லாத் தனியார் அலுவலகம் மற்றும் நிறுவனங்களும் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மதுபான கடைகள் இயங்குவதற்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அத்தியாவசியத் துறைகளை தவிர்த்து மாநில அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
காய்கறி, இறைச்சி கடைகள் மற்றும் மளிகை கடைகள் போன்றவைகள் 10:00 மணி வரையில் மட்டுமே செயல்படும். திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 50 பேருக்கு மேல் பங்கேற்கக்கூடாது. இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 20 பேரை தாண்டாமல் பங்கேற்க வேண்டும் ,போன்ற பலவிதமான கட்டுப்பாடுகளை அரசு வெளியிட்டு இருக்கிறது.
இந்த சூழலில் மாநிலத்தில் ஊரடங்கை மேலும் சில நாட்களுக்கு நீட்டிப்பது தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் நாளையதினம் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த இருக்கிறார் என்ற தகவல் கிடைத்திருக்கிறது. மருத்துவ நிபுணர்கள் பரிந்துரையின் அடிப்படையில்தான் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக தமிழக அரசு முடிவெடுக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.