காத்திருந்த பயணிகளை நெகிழவைத்த முதலமைச்சர்!

0
105

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்தில் வெகு நேரம் காத்திருந்த பயணிகள் குடிநீர் உணவு இல்லாமல் தவிப்பதை தெரிந்து கொண்டதும் பயணிகளை சமூக நல கூடத்திற்கு அழைத்துவரச் செய்து உணவு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக வெளியிடப்பட்டிருக்கின்ற அறிவிப்பில் நேற்றைய தினம் சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த பயணிகள் பயணம் செய்ய இயலாமல் நீண்ட நேரமாக காத்து இருந்து வருகிறார்கள் என்ற செய்தியை கேட்ட முதலமைச்சர் ஸ்டாலின் அந்த பயணிகளின் குறைகளை போக்குவதற்கு நிர்வாக கூடுதல் ஆணையர் பல்லவி இந்திய ஆட்சிப் பணி, பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் திரு இயேசுநாதர் செட்டி ஆகிய அரசு உயர் அதிகாரிகளை நேரடியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அனுப்பிவைத்து அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே அதன் அடிப்படையில் தொடர்வண்டி நிலையத்தில் காத்திருந்த பயணிகள் கண்ணப்பர் திடல் சமூகநல கூடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கே அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது. அதோடு அந்த பயணிகள் பயணம் செய்வதற்கு ஏற்றவாறு ரயில் வசதியை உண்டாக்கி தருவதற்கு ரயில்வே நிர்வாகத்துடன் தமிழக அரசால் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அதோடு பயணிகளின் வசதிக்காக உதவி மேஜை வசதியும் உண்டாக்கப்பட்டிருக்கிறது.பயணிகள் தங்களுடைய குறைகளை உ தீர்த்துக்கொள்ளவும் தாங்கள் பயணம் செய்வதற்கு சிறந்த ஏற்பாடு செய்து தந்த முதலமைச்சர் அவர்களுக்கு தங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.