திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் கரடிப்பட்டி கிராமத்தைச் சார்ந்த பொன்னழகன், பூவாத்தாள் என்ற தம்பதியினரின் மகன் அருண்குமார் இவர் அங்கே இருக்கக்கூடிய சேவல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்ததாக சொல்லப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இந்த வருடம் ஹைதராபாத்தில் இருக்கக்கூடிய இந்திய தொழில்நுட்ப கழகத்தில் பொறியியல் படிப்பு படிப்பதற்காக நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார் இவர் தேர்தலில் வெற்றி பெற்று 170,67வது இடமும் ஜேஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி அடைந்து 12575வது இடத்தையும் பிடித்திருக்கிறார்.
அதனை முன்னிட்டு மாணவர் அருண் குமாரை நேரில் அழைத்து முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டியிருக்கிறார்.
எந்தவிதமான பின்புலமும் இல்லாமல் அரசுப் பள்ளியில் படித்து இந்த சாதனையை புரிந்தார் மாணவரை பாராட்டிய முதலமைச்சர், அந்த மாணவர் உடைய மேற்படிப்புக்கான கல்விச் செலவு முழுவதையும் தமிழக அரசு ஏற்கும் என்று உறுதியளித்திருக்கிறார்.
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு திறமை இருக்கிறது அவர்களும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற கூடிய அளவிற்கு அரசுப் பள்ளிகளில் தரமான விதத்தில் பாடம் கற்பிக்கப்படுகிறது என்பதை இந்த சம்பவம் சுட்டிக்காட்டி இருக்கிறது.
அண்மையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரசுப்பள்ளி தானே என்று தாழ்வாக எண்ண வேண்டாம். அரசுப் பள்ளிகளில் தங்களுடைய பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்களும் முன்வரவேண்டும் அரசுப் பள்ளி என்பது பெருமையின் அடையாளம் என்ற விதத்தில் மாற்றி காட்டுவதற்காக உழைத்து வருகிறோம் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.