Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மத்திய அரசுக்கு குடைச்சல் கொடுக்க தொடங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!


சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை புதிதாக கொண்டு வந்தது. அந்த வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் கிளர்ந்தெழுந்து போராட்டம் நடத்தி வந்தார்கள். டெல்லியில் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி வந்த விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் போராட்டம் தொடங்கியது.

அந்த வகையில், தமிழகத்தில் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக ஸ்டாலின் தலைமையில் இந்த 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து போராட தொடங்கியது. அப்பொழுதே ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் இந்த மூன்று காலகட்டங்களில் தமிழகத்தில் நுழைய விடமாட்டோம் என்று தெரிவித்திருந்தார்.

அந்த விதத்தில் தற்சமயம் சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில், 3 வேளாண் சட்டங்களையும், மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கூறி முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடத் தொடங்கி இன்றுடன் ஆறு மாத காலங்கள் ஆகி விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆகவே விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை மற்றும் உணர்வுகளை மதித்து 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். எனவே இது இதுதொடர்பாக ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண வேண்டும். ஆனால் அதற்கு முயற்சி செய்யாதது கவலை தருகிறது என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்..

வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு திமுக கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் எனவும், மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும், முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version