Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சென்னையில் புதிதாக திறக்கப்படும் இரண்டு மேம்பாலங்கள்! வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!

சென்னை மக்கள் சந்தித்துவரும் பல பிரச்சனைகளில் மிக முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று போக்குவரத்து நெரிசல் போக்குவரத்து நெரிசல் காரணமாக, பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் கல்லூரி மாணவர்கள், அதேபோல அலுவலகங்களுக்கு செல்பவர்கள் அவசரமாக மருத்துவமனைக்கு செல்பவர்கள், என்று அனைத்து தரப்பு மக்களும் இதனால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

ஆகவே இதனை கருத்தில் கொண்டு சென்னையில் ஏற்கனவே சொல்லப்போனால் சென்னை முழுவதும் பல மேம்பாலங்கள் கட்டப்பட்டு போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் சென்னைவாசிகள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் இன்னமும் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை ஆகவே தற்போதும் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

இன்னும் சொல்லப் போனால் சென்னை நுழைவாயிலில் கால்வைத்தால் திரும்பும் பக்கமெல்லாம் மேம்பாலங்கள் தான் காட்சியளிக்கும் அந்த விதத்தில் தமிழ்நாட்டிலேயே அதிக மேம்பாலங்கள் உள்ள ஒரு நகரமாக சென்னை நகரம் விளங்கி வருகிறது.

இந்தநிலையில், வேளச்சேரி பகுதியில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதத்தில் ரூபாய் 108 கோடி மதிப்பீட்டில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்ட முடிவு செய்து கடந்த 2016ஆம் வருடம் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. நில ஆர்ஜிதம், குழாய் மாற்றி அமைப்பது உள்ளிட்ட காரணங்களால், மேம்பாலம் கட்டும் பணியும் தடங்கல் உண்டானது. இந்த சூழ்நிலையில், பணிகள் அனைத்தும் முடிவடைந்து இருப்பதால் பாதத்தில் ஒரு வழித்தடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டு இருக்கிறது.

அதேபோல கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கோயம்பேடு மேம்பாலம் கட்டும் பணி ஆரம்பமானது நோய்த்தொற்று காரணமாக, கட்டுமானப் பணியில் தடங்கள் உண்டானது மீண்டும் கட்டுமான பணிகள் விரைவுபடுத்தப்படும் அதைத்தொடர்ந்து மேம்பால பணிகள் நிறைவு பெற்றிருக்கிறது. இந்த மேம்பாலம் நான்கு வழிப்பாதையாக கட்டப்பட்டிருக்கிறது ஜெயநகர் பூங்காவில் ஆரம்பித்து தேமுதிக அலுவலகம் வரையில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், நவம்பர் மாதம் 1ஆம் தேதி அதாவது வரும் திங்கள்கிழமை கோயம்பேடு மற்றும் வேளச்சேரி மேம்பாலங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார் என்று தகவல் கிடைத்திருக்கிறது. இந்த இரண்டு மேம்பாலங்கள் திறப்பு போக்குவரத்து நெரிசலை குறைக்கும் என்பதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

Exit mobile version