Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அண்ணாமலையின் புகாரால் தூக்கி அடிக்கப்பட்ட சிஎம்டிஏ மூத்த அதிகாரிகள்?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட புகார் பட்டியலில் குறிப்பிடப்பட்ட மூத்த திட்ட அதிகாரி உள்ளிட்ட 8 அதிகாரிகளை இடமாற்றம் செய்து சிஎம்டிஏ அறிவித்துள்ளது.

இது தொடர்பாக குறிப்பிடப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சாதகமாக சென்னை பெருநகர வளர்ச்சி குடும்பமான சிஎம்டிஏ செயல்படுகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஜூன் மாதத்தில் புகார் வழங்கியிருந்தார். அதில் சிஎம்டிஏ வில் மூத்த திட்ட அதிகாரியாக இருக்கின்ற ருத்ரமூர்த்தி உள்ளிட்ட சிலரின் பெயரை அண்ணாமலை குறிப்பிட்டு சொல்லியிருந்தார்.

அப்போது அண்ணாமலை தெரிவித்த புகார்களில் ஆதாரம் இல்லை என்று வீட்டு வசதி மற்றும் நகர் புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி இதற்கு மறுப்பு தெரிவித்தார். இந்த நிலையில் அண்ணாமலை புகாரில் சுட்டிக்காட்டப்பட்ட மூத்த திட்ட அலுவலர் ருத்ரமூர்த்தி உள்ளிட்ட 8 அதிகாரிகள் வெவ்வேறு பிரிவுகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

4 மூத்த திட்ட அலுவலர்கள், 2 துணை திட்ட அலுவலர்கள், 2 உதவி திட்ட அலுவலர்கள் என்று 8 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். சென்னை நந்தம்பாக்கத்தில் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திற்காக சில வகை பாடும் மாற்றத்தில் அதிகாரிகளுக்கு எழுந்த பிரச்சனையும் இதற்கு காரணமாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version