கூட்டுறவு சங்கங்களை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர மத்திய அரசு திட்டமிடுகிறது!என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- கூட்டுறவு சங்கங்களை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் எடுக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.இனி கூட்டுறவு வங்கிகளும்,சங்கங்களும் நகைக்கடன் வழங்கக் கூடாது என்று அறிவித்து நகைக்கடனை ரத்து செய்கிறது அதிமுக அரசு! இதனால் கூட்டுறவின் நோக்கமும் சிதையும்; இது மட்டுமின்றி நடுத்தரக் குடும்பங்கள் தனது அவசர தேவைக்காக நகைக்கடன் பெற்று வந்தனர். தற்போது இந்த அறிவிப்பால் சாமானியர்களின் வாழ்வும் நிர்கதியாகும்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் எந்தவித கடனும் இன்று முதல் மறு உத்தரவு வரும்வரை வழங்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், மு.க ஸ்டாலின் மேற்கண்ட பதிவை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.