சுவையான தேங்காய் லட்டு சிம்பிளா வீட்டிலேயே செய்யலாம்..!!

0
261

Thengai Laddu: லட்டு என்றால் அனைவருக்கும் முதலில் வருவது திருப்பதி லட்டு தான். இந்திய பண்டிகளில் இந்த லட்டு இல்லாமல் இருப்பது இல்லை. லட்டு என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அனைவருக்கும் பிடித்த இனிப்புகளில் ஒன்றுதான் இந்த லட்டு. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் விரும்பி சாப்பிடுவார்கள்.

அந்த வகையில் லட்டுகளில் பலவகையான லட்டுகள் உள்ளன. நாம் தற்போது பார்க்க இருப்பது தேங்காய் லட்டு தேங்காய் இருந்தால் போதும் மிகவும் சுவையான தேங்காய் லட்டு செய்து (thengai laddu seivathu eppadi) விடலாம்.

தேவையான பொருட்கள்

தேங்காய் துருவியது -1 கப்
வெல்லம் – 1 கப்
ஏலக்காய் தூள் – தேவையான அளவு
நெய் அல்லது வெண்ணெய் – தேவையான அளவு
முந்திரி, திராட்சை – தேவையான அளவு

செய்முறை

முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் கடாய் வைத்து சிறிதளவு நெய் அல்லது வெண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு துருவி வைத்துள்ள தேங்காய் துருவலை அதில் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது எடுத்து வைத்துள்ள வெல்லம் துருவலை சேர்த்து நன்றாக கிளறி கொள்ள வேண்டும். கட்டிகள் இல்லாமல் தொடர்ந்து கிளறி கொண்டே இருக்க வேண்டும். தேவையான அளவு நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து தொடர்ந்து கிளறி கொண்டே இருக்க வேண்டும்.

இப்பொழுது தேங்காய் சுருண்டு லட்டு பிடிக்கும் பதத்திற்கு வரும் பொழுது வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை அதில் சேர்த்து ஏலக்காய் தூள் தூவி இறக்கி விட வேண்டும். கை பொறுக்கும் அளவிற்கு சூடு இருக்கும் பொழுது சிறு சிறு உருண்டைகளாக லட்டாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது சுவையான தேங்காய் லட்டு தயார்.

மேலும் படிக்க: ரவா இருந்தா போதும் வெறும் 10 நிமிஷத்துல பாயசம் செய்யலாம்.. செம டேஸ்டா இருக்கும்..!!