இனி பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய்? ரேஷன் கடைகளில் வரும் புதிய மாற்றம்!
தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறுகையில் தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு பாமாயில் வழங்கப்பட்டு வருகின்றது.அவ்வாறு வழங்கப்பட்டதில் இருந்தே மக்களுக்கு பல்வேறு வகையான நோய்களும் அதிகரித்து கொண்டு தான் வருகிறது என்றார்.
பொதுவாகவே ரேஷன் கடைகளில் எண்ணெய்,அரிசி,கோதுமை,சர்க்கரை.டீ தூள் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது.அதனுடன் வழங்கப்படும் பொருட்களில் ஒன்றுதான் பாமாயில் இதனால் அதிகளவு நோய் ஏற்படுகிறது.பெரியவர்கள் உண்ணும் பொழுது அவர்களுக்கு மூட்டு வலி போன்றவைகள் ஏற்படுகிறது.
அதனை வேறொரு இடத்தில் இறக்குமதி செய்து நாம் நாட்டில் விற்பனை செய்வதற்கு பதிலாக நாம் இடத்தில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெயை அனைத்து ரேஷன் கடைகளிலும் பாமாயிலுக்கு பதில் விற்பனை செய்தால் அதனை வாங்கி பயன்படுத்தும் பொதுமக்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள் என கூறினார்.
அதனால் தமிழக அரசு உடனடியாக ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் பாமாயிலை நிறுத்திவிட்டு அதற்கு பதில் அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களுடன் சேர்த்து தேங்காய் எண்ணெய் ,நல்லெண்ணெய்,கடலை எண்ணெய் போன்றவைகளை வழங்கலாம் என தமிழக அரசை வலியுறுத்தினார்.