இந்த மாவட்டத்தில் ரேஷன் கடையில் பாமாயிலுக்கு பதிலா தேங்காய் எண்ணெய் விற்பனையா??
கரூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை விற்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கலெக்டரிடம் தென்னை வேளாண் பயிர் சாகுபடி சங்கம் மற்றும் தமிழ் மாநில தென்னை உற்பத்தியாளர் சங்கத்தினர் மனு அளித்தனர்.
கரூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டினால் இன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டு அவர்களின் குறைதீர்க்கும் மனுக்களை அளித்தனர்.
அந்த மனுக்களை எல்லாம் கலெக்டர் பிரபுசங்கர் பெற்று துறை அதிகாரியிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் தென்னை மற்றும் வேளாண் பயிர் சாகுபடி சங்கத்தினர் மற்றும் தமிழ் மாநில தென்னை உற்பத்தியாளர் சங்கத்தினர் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது, தங்களின் தேங்காய் விலை சரிவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு விவசாயிகளிடம் தேங்காய் விலை பெற்று அவற்றின் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.
இதனால் தென்னை விவசாயிகள் அனைவரும் பயன் பெறுவார்கள். மேலும் மத்திய அரசு கொப்பரை தேங்காய் கொள்முதல் விலையை குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.105.90 அறிவித்துள்ளது.ஆனால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் 80,90 க்கு மேல் யாரும் தேங்காயை வாங்குவதில்லை.
கடந்த 2013 ஆம் ஆண்டு கொப்பரை தேங்காய் விலை ரூ.95 விற்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது கூலி உயர்வு மற்றும் இடுப்பொருள் விலை உயர்வால் கொப்பரை தேங்காய் பருப்பு ரூ.150 வரை உயர்த்தி அரசே எடுத்துக் கொள்ள பரிந்துரை செய்ய வேண்டும்.
எனவே பாமாயிலுக்கு பதிலாக அனைத்து ரேஷன் கடைகளிலும் தேங்காய் எண்ணெயை விற்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் சத்துணவு திட்ட சமையலுக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் அண்டை மாநிலங்களில் தென்னை மரத்தில் கல் இறக்க அனுமதி தந்தது அதேபோல், தமிழகத்திலும் கல் இறக்க அனுமதி தர வேண்டும். அதன்படி தென்னைக்கு சொட்டுநீர் பாசனம் மெலிந்த பிளாஸ்டிக் டியூப் பயன்படுத்தினால் குறுகிய காலங்களில் உடைந்து விடுகின்றது.
அதனால் பி.வி.எஸ் பைப் மூலம் நீர் பாய்ச்ச நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது கரூர் மாவட்டத்தில் யூரியா மற்றும் பொட்டாஸ் விலை குறைத்து அனைத்து உரை கடங்களிலும் விலை பட்டியல் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தென்னை மற்றும் வேளாண் பயிர் சாகுபடி சங்கம், தமிழ் மாநில தென்னை உற்பத்தியாளர் சங்கத்தினர் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதனை விரைவில் அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்கள்.