ஊர்க்காவல் படையில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! படித்த இளைஞர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

0
263

கோயமுத்தூர் மாநகர ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான ஊர் காவல் படை தேர்வு நடத்தப்பட உள்ளது. ஆர்வமும், தகுதியும் இருப்பவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி – பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாத ஆண்கள், பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள்

வயதுவரம்பு –
20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயது நிரம்பாதவராகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பம் செய்ய கடைசி நாள் – 25-10 – 2022

விண்ணப்பங்களை கோவை காந்திபுரம் சி -1 காட்டூர் காவல் நிலைய வளாகத்தில் இருக்கின்ற கோவை மாநகர ஊர்க்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து விண்ணப்பம் செய்யலாம்.

மேற்படி விவரங்களுக்கு 9498171293,9942346806,9498172525 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

ஊர்க்காவல் படை என்றால் என்ன ?

இந்திய காவல் துறைக்கு துணையாக செயல்படும் தன்னார்வ படையாகும் இந்த ஊர்க்காவல் படை. இந்தியா சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே நடைபெற்ற போருக்கு பிறகு இந்திய காவல்துறைக்கு உதவி புரிய 1962 ஆம் ஆண்டு ஊர்க்காவல் படை அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் ஊர்க்காவல் படையின் சட்டம் 1963 பிரிவு 7 ல் காவல்துறையினருக்கு இணையான பொறுப்பும் அதிகாரமும் ஊர்க்காவல் படையினருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. காவல்துறையில் தன்னார்வ தொண்டாக பணியாற்றும் ஊர் காவல் படையினர், காவலர்களின் அனைத்து பணிகளையும் அதாவது வாகனம் ஓட்டுவது, போக்குவரத்தை ஒழுங்கு செய்வது, இரவு ரோந்து பணிகள், பாதுகாப்பு பணிகள், விஐபிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது, தேர்தல் கால பணிகள், நீதிமன்ற வழக்குகளுக்கு ஆஜராவது உள்ளிட்ட காவல்துறையினர் செய்யும் அனைத்து பணிகளையும், ஊர்காவல் படையினரும் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.