Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கனமழையால் வாழ்வாதாரத்தை இழந்த கோவை மக்கள்

தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் கர்நாடக, கேரளா, தமிழகம் போன்ற பகுதிகள் கனமழை பெய்து வருகின்றது. கடந்த மூன்று நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களில் கடும் மழை பெய்து வருகின்றது.
கடந்த மூன்று நாட்களாக கோவை மாவட்டத்தில் அட்டப்பட்டி, சிறுவாணி மற்றும் வெள்ளியங்கிரி காடுகளில் பலத்த மழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆறாக ஓடுகின்றது .பலத்த காற்றால் தொண்டாமுத்தூர், நரசீபுரம், பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து கிடக்கிறது.

மாவூத்தம்பதிபகுதியை சேர்ந்த இடத்தில் 90 சதவீதத்திற்கும் மேல் வாழை மரங்கள் தான் பயிரிடப்பட்டுள்ளது. இந்த மழை காற்றினால் சாய்ந்து மண்ணில் கிடைக்கின்றது. இன்னும் ஆறு மாதத்தில் வாழை மரங்கள் அரிப்புக்கு வரும் நிலையில் ஏக்கருக்கு சுமார் ஆயிரம் வாழை என கணக்கிட்டால் 70 முதல் 80 லட்சம் வாழைமரங்கள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனை மதிப்பிடும் வகையில் சுமார் ஒரு கோடியை தாண்டும் என கூறப்படுகிறது. இதனால் சந்தையில் வாழைத்தார்கள் ரூபாய் 200 முதல் 300 வரை விலை போகும் என்பதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.

கடந்த 2005 முதல் 2009 ஆம் ஆண்டுகளில் பலத்த காற்று காரணமாக இப்பகுதியில் வாழை மரங்கள் முற்றிலும் சேதமடைந்தது. 2014 ஆம் ஆண்டு வீசிய சூறைக் காற்றினால் மரங்கள் சரிந்தன.இதற்கான நஷ்டங்களை அதிகாரிகள் கவனிப்பது இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விவசாயிகள் குறைந்த பட்சமாக ஒரு வாழை மரத்திற்கு ரூ.20 தருமாறு அரசிடம் கோரிக்கை விடுக்கின்றனர். இதனை அரசு ஏற்றுக்கொண்டு உதவி செய்யுமாறு மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Exit mobile version