Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கோவை: பிரபல நகை கடையில் 100 சவரன் நகைகள் திருட்டு.. கைவரிசை காட்டிய தனி ஒருவன்..!!

#image_title

கோவை: பிரபல நகை கடையில் 100 சவரன் நகைகள் திருட்டு.. கைவரிசை காட்டிய தனி ஒருவன்..!!

ஜோஸ் ஆலுகாஸ் என்ற புகப்பெற்ற நகைக்கடை தமிழகம் முழுவதும் பல கிளைகளை கொண்டிருக்கிறது. இதன் ஒரு கிளை கோயம்பத்தூர் மாவட்டத்தின் காந்திபுரம் பகுதியில் இயங்கி வருகிறது.

இந்நிலையில் எப்பொழுதும் போல் இன்று காலையில் கடையை திறந்த போது ஊழியர்களுக்கு கடும் அதிர்ச்சி தரும் நிகழ்வு ஒன்று அரங்கேறி இருக்கிறது. அது என்னவென்றால் கடையில் இருந்து நகை திருடப்பட்டு இருப்பது தான். நகை காணாமல் போயிருப்பது குறித்து உடனடியாக காட்டூர் காவல் நிலையத்தில் ஜோஸ் ஆலுகாஸ் சார்பில் புகார் கொடுக்கப்பட்டு போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

முதற்கட்ட விசாரணையில் நேற்று இரவு கடையில் இருந்து 100 சவரன் நகை திருடபட்டு இருப்பது உறுதியானது. பின்னர் இந்த நகை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பது குறித்து அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது தனி நபர் ஒருவர் தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது.

இந்நிலையில் கொள்ளை அடித்த நபர் யார் , 100 சவரன் நகை திருட்டில் வேறு சிலருக்கு தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து காவல் துறையினர் மோப்ப நாய் உதவியுடன் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த கொள்ளை சம்பவம் அருகில் உள்ள மற்ற நகை கடைக்காரர்களை பீதியில் ஆழ்த்தி இருக்கிறது.

Exit mobile version