மழைக்கால நோய் என்றால் அது சளி,இருமல் தான்.இந்த பாதிப்புகள் வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது.குழந்தைகள் இந்த பாதிப்பை அடிக்கடி சந்தித்து வருகிறார்கள்.சளி,இருமலை போக்க மருத்துவரை நாடாமல் 1/2 கிலோ நண்டு வாங்கி ரசம் செய்து குடித்து பலன் பெறுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)நண்டு – 1/2 Kg
2)பூண்டு – 10 பல்
3)சீரகம் – ஒரு தேக்கரண்டி
4)கரு மிளகு – ஒரு தேக்கரண்டி
5)இஞ்சி – ஒரு துண்டு
6)சின்ன வெங்காயம் – 10
7)கொத்தமல்லி தூள் – 1/2 தேக்கரண்டி
8)மஞ்சள் பொடி – 1/4 தேக்கரண்டி
9)எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
10)கறிவேப்பிலை – ஒரு கொத்து
11)மல்லித்தழை – சிறிதளவு
செய்முறை விளக்கம்:-
முதலில் அரைகிலோ நண்டை தண்ணீரில் போட்டு இரண்டு முதல் மூன்று முறை அலசி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு அதை உரலில் போட்டு நன்றாக இடியுங்கள்.
இடித்த நண்டை ஒரு காட்டன் துணியில் போட்டு பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு
உரலில் 10 பல் பூண்டு,10 தோல் நீக்கிய சின்ன வெங்காயம்,ஒரு துண்டு தோல் நீக்கிய இஞ்சி,ஒரு தேக்கரண்டி சீரகம் மற்றும் ஒரு தேக்கரண்டி கரு மிளகு சேர்த்து கொரகொரப்பாக இடித்துக் கொள்ளுங்கள்.
பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து சூடாக்கவும்.அதன் பின்னர் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இடித்த சீரகம் மிளகு கலவையை போட்டு வதக்குங்கள்.பிறகு அதில் கொத்தமல்லி தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
அடுத்து தயார் செய்து வைத்துள்ள நண்டு சாறை அதில் ஊற்றி ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.இதையடுத்து தேவையான அளவு கல் உப்பு மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து குறைவான தீயில் 15 நிமிடங்களுக்கு கொதிக்கவிடுங்கள்.இந்த நண்டு ரசத்தை குடித்தால் சளி,இருமல் அனைத்தும் ஓடிவிடும்..