சளி தொல்லை? ஒரே நாளில் உடலில் உள்ள சளி முழுவதும் கரைந்து வெளியேற இதை 1 கிளாஸ் குடிங்க!!

0
68
#image_title

சளி தொல்லை? ஒரே நாளில் உடலில் உள்ள சளி முழுவதும் கரைந்து வெளியேற இதை 1 கிளாஸ் குடிங்க!!

மழைக்காலம் தொடங்கிவிட்டாலே கூடவே சளி, இருமல் போன்ற பாதிப்புகள் நமக்கு எளிதில் தொற்றி விடும். இதனை சரி செய்ய மாத்திரை உண்பதை விடுத்து இயற்கை முறையில் தீர்வு காண்பது நல்லது.

சளியால் ஏற்படும் பாதிப்பு:-

*ஆஸ்துமா

*மூக்கில் அலர்ஜி

*சைனஸ் பாதிப்பு

*மூச்சிரைப்பு

*மூக்கு ஒழுகுதல்

*மூக்கடைப்பு

*மூச்சு விடுதலில் சிரமம்

*தொண்டை வலி

*தொண்டை புண்

சளி தொல்லை நீங்க இயற்கை வைத்தியம்:-

தேவையான பொருட்கள்:-

*இஞ்சி

*சின்ன வெங்காயம்

*எலுமிச்சை சாறு

*தேன்

செய்முறை:-

முதலில் இரண்டு சின்ன வெங்காயத்தை எடுத்து தோலை நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும். இதை ஒரு உரலில் போட்டு இடித்து ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ளவும். அடுத்து சிறு துண்டு இஞ்சியை தோல் நீக்கி உரலில் போட்டு இடித்து கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடு படுத்தவும்.

பின்னர் இடித்து வைத்துள்ள சின்ன வெங்காயம் மற்றும் இஞ்சி சேர்த்துக் கொதிக்க விடவும். 1 1/2 கிளாஸ் தண்ணீர் சுண்டி 1 கிளாஸ் அளவு வரும் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இதை டம்ளருக்கு வடிகட்டி1 தேக்கரண்டி அளவு எலுமிச்சை சாறு மற்றும் 1 தேக்கரண்டி அளவு தேன் சேர்த்து கலந்து பருகவும். இவ்வாறு செய்வதன் மூலம் சளி தொல்லை முழுமையாக நீங்கும்.