Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த தேதிக்குள் முதலாம் ஆண்டு மாணவர்களின் கல்லூரி சேர்க்கை முடிக்க உத்தரவு!!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில், இரண்டு வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடியே இருந்தது. இந்த நிலையில் ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டது. மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக கல்வி பயில வேண்டும் என்ற நிலை இருந்தது.

மேலும், மாணவர்கள் படிக்கும் திறனும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்தது. அதனை தொடர்ந்து இரண்டாவது அலை காரணமாக பள்ளிகள் திறக்கப்படும் என்று நிலையில் திடீரென்று பள்ளிகள் மொத்தமும் இழுத்து மூடப்பட்டன. அதன்பின் பொதுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன. கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இறுதியாக மாணவர்களின் பொதுத் தேர்வுகளும் மொத்தமாக ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாக உள்ளன. மேலும், அதனைத் தொடர்ந்து மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்ணை பதிவேற்றிய பெண் நடப்பு கல்வி ஆண்டில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையை வரும் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கின்றது.

இந்த நிலையில், புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது. அதில், ‘அனைத்து மாநிலங்கள் மற்றும் சிபிஎஸ்சி பிளஸ் டூ தேர்வு முடிவுகளை வெளியிட்ட பிறகே முதலாமாண்டு மாணவர் சேர்க்கையை கல்லூரிகள் தொடங்க வேண்டும் எனவும், நடப்பு கல்வியாண்டில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், முதலாம் ஆண்டு வகுப்புகள் அக்டோபர் 1ஆம் தேதிக்கு தொடங்கப்பட வேண்டும். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டால் அக்டோபர் 18ம் தேதிக்குள் வகுப்புகள் தொடங்கப் பட வேண்டும் என்று கூறப்பட்டது. நடப்பு கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் மற்றும் விடுமுறைகள் உள்ளிட்டவற்றை அக்டோபர் 1ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜூலை 31-ஆம் தேதிக்குள் திட்டமிட்டு செயல்படவேண்டும் என்றும், பருவத் தேர்வுகளை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.

மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டால் அல்லது மாணவர்கள் வேறு இடங்களுக்கு சென்றாலும் முழு கட்டணத்தையும் திரும்ப வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது’.

Exit mobile version