Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழ்நாட்டில் நாளை முதல்… கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை!!

தமிழ்நாட்டில் நாளை முதல்… கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை!!

நாடு முழுவதும் கொரோனா தொற்றானது மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்தது. மேலும், அதன் காரணமாக பல உயிர்கள் இறந்தன. அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளிகள் முதல் கோவில்கள் வரை அனைத்தும் மூடப்பட்டன.

அதுமட்டுமல்லாமல் தளர்வுகள் அற்ற ஊரடங்கு மற்றும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்குகள் கடைபிடிக்கப்பட்டது.அப்படி கெடுபிடிகள் இருந்தாலும் மக்கள் பொது இடங்களில் கூட்டம், கூட்டமாக தான் சுற்றி திரிந்தனர்.

அதன் பின் வைரஸை கட்டுப்படுத்த அரசு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா வைரஸின் இரண்டாவது தாக்கம் கட்டுக்குள் வந்தது. அத்துடன் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.

மேலும், மாணவர்களின் மதிப்பெண்கள் சிறிது நாட்களுக்கு முன் தான் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்ட காரணத்தினால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கின்றது.

இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள 543 அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குனரின் அவர்கள் அறிவித்து உள்ளார்.

Exit mobile version