Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை! கொள்ளையர்களால் நடந்த விபரீதம்!

Collective sexual abuse of a woman on a moving train! The tragedy caused by the robbers!

Collective sexual abuse of a woman on a moving train! The tragedy caused by the robbers!

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை! கொள்ளையர்களால் நடந்த விபரீதம்!

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து மராட்டியத்தில் உள்ள  மும்பை நோக்கி, நேற்று இரவு லக்னோவிலிருந்து மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் சென்றது. அப்போது சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில்  மராட்டியத்தின் லாகூர் நகரில் உள்ள நிலையத்திற்கு ரயில் வந்தபோது, அதில் பயங்கர ஆயுதங்களுடன் சில கொள்ளையர்கள் ஏறியுள்ளனர்.

அதுவும் அவர்கள் ஏறி பயணிகளிடம் ஆயுதங்களை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்த நகை மற்றும் பணத்தை எல்லாம் கொள்ளை அடித்தனர். அதன் பிறகு ஒரு பெண் பயணி ஒருவரையும் ஓடும் ரயிலிலேயே அந்த கொள்ளையர்கள் ஆறு பேரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இந்த கொடுமையை பார்க்க முடியாத சில பயணிகள் தடுக்க முயன்ற போது அவர்களையும் பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கி உள்ளனர். இதில் மட்டும் 6 பயணிகள் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

மும்பையின் கசாரா என்ற ஒரு பகுதியில் உள்ள ஒரு ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தவுடன் பயணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து கூச்சலிடத் தொடங்கினார். அதன் காரணமாக உடனடியாக அங்கு விரைந்த ரயில்வே போலீசார் கொள்ளையர்கள் 2 பேரை கைது செய்தனர். ஆனால் ஆறு பேர் தப்பி சென்று விட்டனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ரயில்வே போலீசார் தப்பி ஓடிய மீதமுள்ள கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். போலீசார் தேடுதல் வேட்டை நடத்தும் போது மேலும் இரண்டு கொள்ளையர்களை விரட்டி பிடித்துள்ளனர். தப்பியோடிய நான்கு கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஒரு ஓடும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில் பயணிகளின் முன்பாகவே கொள்ளை மற்றும் பெண் பயணியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பயணிகளுக்கும் பாதுகாப்பு இல்லையோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version