அரசுக் கல்லூரிகளில் சுழற்சி முறை இல்லை – கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவிப்பு.
தமிழ்நாட்டில் கல்வித் துறையில் பெரும் மாற்றங்கள் சமீப காலமாக நிகழ்ந்த வண்ணம் உள்ளது. பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவர்களின் திறனை மேம்படுத்தவும் மத்திய அரசுத் தேர்வுக்குத் தயாராகும் வகையில் பாடத்திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.இரண்டு தேர்வுகளாக நடத்தப்பட்டு வந்த மொழிப்பாடம் தற்போது ஒரே தேர்வாக மாற்றப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஐந்தாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.இதனை அடுத்து பல்வேறு அரசியல் கட்சியினரும் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் அந்த முடிவில் இருந்து பின்வாங்காத அரசு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர்.இராமதாஸ் அவர்களின் அறிக்கையை அடுத்து பொதுத்தேர்வு ரத்து செய்வதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.
இதனை அடுத்து தற்போது கல்லூரிக்கல்வி இயக்குநரகமும் சீர்திருத்தங்களை மேற்கொள்ள முயற்சித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் சமார் 70 சதவீதம் சுழற்சி முறை(ஷிப்ட்) முறையில் இயங்குகிறது.
அதாவது காலை வேளையில் 8:30 – 1:15 வரையலும் மாலை வேளையில் 1:30 முதல் 6 மணி வரையிலும் இயங்குகிறது.இவ்வாறு இயங்குவதால் மாணவர்கள் கல்வியில் பெரும் முன்னேற்றம் காணப்படவில்லை எனவும் தெரிகிறது.
இவ்வாறு சுழற்சி முறை கல்லூரியில் காலை வேளையில் அரசு பேராசியர்களும், மாலை வேளையும் கௌரவ விரிவுரையாளர்களும் பணிபுரிகின்றனர். இதன் காரணமாக மாலை நேர வகுப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.இதில் மாணவர்கள்படும் சிரமங்கள் உள்ளதை உணர்ந்த கல்லூரிக்கல்வி இயக்குநரகம் இனி சுழற்சி முறை இரத்து செய்யப்பட்டு காலை 10 – 4 என முழுவேளையாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதனால் கல்லூரிகளில் செய்யப்பட வேண்டிய உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது