ஊரடங்கு நேரத்தில் கல்விக் கட்டணம் செலுத்த நெருக்கடி.! திமுக முன்னாள் அமைச்சரின் கல்லூரியில் நடக்கும் கெடுபிடி.!!

0
172

ஊரடங்கு நேரத்தில் கல்விக் கட்டணம் செலுத்த நெருக்கடி.! திமுக முன்னாள் அமைச்சரின் கல்லூரியில் நடக்கும் கெடுபிடி.!!

கொரோனா பாதிப்பு காலத்தில் கல்விக் கட்டணம், விடுதி கட்டணம் செலுத்துமாறு தனியார் கல்லூரி நிர்வாகம் மாணவிக்கு ஒருவருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவி வருவதால் 2 ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு மே மாதம் 3 ஆம் தேதி வரை போடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி இருப்பதோடு வேலை இழந்தும், வருமானம் இன்றியும் தவித்து வருகின்றனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

இந்நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் பூங்கோதை அவர்களின் தந்தை ஆலாடி அருணா என்பவரின் பெயரில் இயங்கி வரும் “ஆலாடி அருணா காலேஜ் ஆஃப் நர்சிங்” என்ற கல்லூரியில் பி.எஸ்.சி நர்சிங் 3 ஆம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவருக்கு கல்விக்கட்டணம் விடுதிக் கட்டணத்தை கல்வி நிறுவனத்தின் வங்கி கணக்கில் செலுத்துமாறு கல்லூரி நிர்வாகம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

கட்டணம் செலுத்த கூறிய கடிதம்

கொரோனா வைரஸ் தாக்கத்தில் நாடே முடங்கி போயிருக்கும் வேளையில் வீட்டு வாடகை கேட்க கூடாது, வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் மூன்று மாத தவணைகள் ஒத்திவைப்பு, வீட்டை காலி செய்யக்கூடாது, என்று பல்வேறு விதிமுறைகளை மக்களுக்காக ஆதரவாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த இக்கட்டான நிலையில் முன்னாள் திமுக அமைச்சரின் கல்லூரியில் படிக்கும் மாணவியை கல்விக்கட்டணம் மொத்தமாக செலுத்த கூறிய சம்பவம் பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.