கல்லூரி இறுதியாண்டு தேர்வு கட்டாயம் நடத்தப்படும்:? “மாணவர்களின் எதிர்காலம்தான் முக்கியம்”! மத்திய அமைச்சர் அதிரடி!

0
96

கல்லூரி இறுதியாண்டு தேர்வு கட்டாயம் நடத்தப்படும்:? “மாணவர்களின் எதிர்காலம்தான் முக்கியம்”! மத்திய அமைச்சர் அதிரடி!

கல்லூரி இறுதியாண்டு தேர்தல் கட்டாயம் மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும், எனவே மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கல்லூரி இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக அனைத்து பள்ளி தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, கல்லூரி இறுதி ஆண்டு தேர்வை தவிர்த்து மற்ற அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று பள்ளிக் கல்வித்துறை மற்றும் உயர் கல்வி துறையால் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளில் வருகின்ற செப்டம்பர் மாதம் இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.இந்தத் தேர்வு குறித்து அனைத்து விதமான வழிகாட்டல்களும் பல்கலைக்கழகங்களுக்கு வெளியிட்டப்பட்டது.இந்த இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு இருக்கின்றது.

இந்நிலையில் மத்திய கல்வி துறை மந்திரி ரமேஷ் போக்ரியால் நேற்று பல்வேறு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர்களோடு கலந்தாய்வு நடத்தினார்.

அப்பொழுது அவர்கள் கூறப்பட்டதாவது மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் நோக்கோடு பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடிவு செய்து இருக்கிறது.எதிர்காலத்தில் மாணவர்கள் எந்தவித சிரமத்திற்கும் ஆளாகாமல் இருக்க இப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கூறினார்.

மேலும் இந்த தேர்வானது ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் அல்லது இரண்டும் சேர்ந்து கலப்பு முறையில் எப்படி வேண்டுமானாலும் தேர்வுகளை நடத்திக்கொள்ளலாம் என்று பல்கலைக்கழகங்களுக்கு விருப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அந்த கலந்தாய்வில் விவாதிக்கப்பட்டது.