Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஸ்கூல் இஸ் நாட் சேஃப்டி! உருக்கமான கடிதத்தை எழுதி விட்டு தற்கொலை செய்து கொண்ட 11ம் வகுப்பு மாணவி!

சென்னை மாங்காட்டில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்டு இருக்கும் வழக்கில் கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். சென்னையை அடுத்த மாங்காடு பகுதியில் பாலியல் தொல்லை காரணமாக 11 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. தமிழகத்தில் பாலியல் தொல்லை காரணமாக, பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது ஆனாலும் இந்த சம்பவத்தை தடுக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில் கோவை மாணவி தற்கொலை, கரூர் மாணவி தற்கொலை, என்று பள்ளிகளில் மாணவிகள் சந்திக்கும் பாலியல் தொல்லைகள் காரணமாக, தற்கொலை செய்து கொள்கிறார்கள் தொடர்ந்து பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருவது பெற்றோர்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

தமிழகஅரசும் படிக்கும் இடத்தில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளானாள் அதுதொடர்பாக தைரியமாக புகார் வழங்க அரசு உதவி என்னையும் வழங்கி இருக்கிறது. ஆனாலும் மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது, பாலியல் தொல்லை கொடுப்பது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளது.

அந்த விதத்தில் சென்னையை அடுத்த மாங்காட்டில் பாலியல் தொழிலின் காரணமாக பதினோராம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் அதோடு அவர் ஒரு உருக்கமான கடிதத்தை எழுதி இருக்கிறார் அதில் பாதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறை மட்டுமே என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதோடு அந்த மாணவி school is not safety எனவும், அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். தற்கொலை செய்துகொண்ட மாணவி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலையில் வழக்கம் போல அவருடைய தந்தை வேலைக்கு சென்று விட்டார், அவரது தாய் மற்றும் மகள் வீட்டில் இருந்திருக்கிறார்கள். தாய் கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்த போது அறைக்குள் சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை, கதவை தட்டியும் திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மாணவி தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்ட நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக மாங்காடு காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைவாக சென்று உயிரிழந்த மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அதோடு சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வருகிறார்கள், விசாரணையில் கடந்த சில நாட்களாக மாணவி தனக்கு நெருக்கமான தோழிகளிடம் பேசாமல் புதிய தோழிகளிடம் பேசியதாகவும், மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், சொல்லப்படுகிறது.

மாணவியின் தற்கொலைக்கு காரணம் என்ன காரணமானவர்கள் யார் என்பது தொடர்பாக தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் மாணவியின் தற்கொலை தொடர்பாக கல்லூரி மாணவர் விக்னேஷ் இன்று போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

Exit mobile version