Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கண் இமைக்கும் நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்த கல்லூரி மாணவர்கள்.!தூள் தூளாக நொறுங்கிய பேருந்தின் முன் பக்க கண்ணாடி! 

College students died tragically in the blink of an eye.

College students died tragically in the blink of an eye.

கண் இமைக்கும் நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்த கல்லூரி மாணவர்கள்.!தூள் தூளாக நொறுங்கிய பேருந்தின் முன் பக்க கண்ணாடி!

திருவண்ணாமலை மாவட்டம் அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகன் பிரபு வயது 22. பிரபு கல்லூரியில் இளங்கலை படிப்பை படித்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்தவர் நவீன் வயது 21 இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவார்.இருவரும் அவ்வப்போது வெளியில் சென்று வரும் பழக்கம் உடையவர்கள். அந்நேரத்தில் இருவரும் இரு சக்கர வாகனத்தில் திருவண்ணாமலை பகுதியில் இருந்து வாழப்பாடி அருகே உள்ள புத்திரகவுண்டன்பாளையத்தில் அமைந்திருக்கும் முருகன் கோவிலுக்கு சென்றுள்ளார்கள்.

சேலம், சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காலை முத்தம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தார்கள். எதிர்பாராத நேரத்தில் ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி புறவழிச் சாலையில் அதிக வேகமாக வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இதில் பிரபு மற்றும் நவீன் தூக்கி வீசப்பட்டார். அதில் வேகத்துடன் வந்த தனியார் பேருந்தின் கண்ணாடிகள் தூள் தூளாக நொறுங்கியது.

அவர்கள் வந்த இரு சக்கர வண்டி பேருந்தின் முன்பக்க டயர்களில் சிக்கிக்கொண்டது. இதனால் பலத்த படுகாயம் அடைந்த கல்லூரி மாணவர் பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு நண்பரான நவீன் படுகாயமடைந்த நிலையில் அவரை  மீக்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

பரிசோதித்த மருத்துவர்கள் நவீன் குமார் இறந்து விட்டதாக கூறினார். மேலும் இந்த விபத்து குறித்து வாழப்பாடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதனால் அங்கு சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இச்சம்பவம் அப்பகுதி  மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Exit mobile version