Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சேலம் மாவட்டத்தில் கல்லூரி ஆசிரியருக்கு கத்திகுத்து! காரணம் என்ன போலீசார் விசாரணை!

College teacher stabbed in Salem district! The reason why the police investigation!

College teacher stabbed in Salem district! The reason why the police investigation!

சேலம் மாவட்டத்தில் கல்லூரி ஆசிரியருக்கு கத்திகுத்து! காரணம் என்ன போலீசார் விசாரணை!

சேலம் மாவட்டம் மேட்டூர் தொட்டில் பட்டி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (40). இவருக்கு ஒரு அண்ணன் உள்ளார். அவரத்தின்  அண்ணன்ணிற்கு இரண்டு  மகன்கள் உள்ளனர் அவர்கள்  காளியப்பன் (29) மற்றும் மாதேஷ் (28). இவர்கள் இருவரும் சேலம் கேம்ப் சாஸ்திரி நகரில் உள்ள ஒரு வீட்டில் வெவ்வேறு அறையை வாடை எடுத்து வசித்து வந்தனர். காளியப்பன் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். மாதேஷ் கட்டிடத் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தனது அண்ணன் காளியப்பனிடம் அடிக்கடி ஏதாவது ஒரு காரணத்தால் தகராறு செய்து வருவார். நேற்று காளியப்பன்னின்  தாயாரின் தோட்டினை கொடுக்குமாறு மாதேஷ் தகராறில்  ஈடுபட்டார்.  அப்போது காளியப்பன் தட்டி கேட்டதால் ஆத்திரம் அடைந்த அவருடைய தம்பி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து காளியப்பனின் கையில் குத்திவிட்டார்.

மேலும் ஆத்திரம் தாங்காமல் காளியப்பன் தொடையிலும் குத்தியுள்ளார். இந்நிலையில் அவர் வலி தாங்க முடியாமல் அலறியதால் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர்  அதனை கண்ட மாதேஷ் தப்பி சென்றுள்ளார். காளியப்பனை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும்  சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காளியப்பன்னிற்கு  சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து காளியப்பனின் சித்தப்பா பெருமாள் கருமலைக்கூடல் போலீஸ் சார்பில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து காளியப்பனின் தம்பி மாதேஷை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version